Breaking News

சுவரை வைத்துத் தான் சித்திரம் வரைய வேண்டுமா? டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

நிர்வாகி
0

இந்தியாவில் மனித வாழ்வின் ஆயுள் காலம்(longevity) 1960ம் ஆண்டு 40 வயதாக இருந்தது. அது 2020ம் ஆண்டில் 69 வயதாக அதிகரித்துள்ளது அதன் காரணங்கள், வாழ்க்கையில் ஆரயோக்கியமாக வாழ்ந்ததும் மற்றும் சிறந்த மருத்துவசேவையும் என்பது வெள்ளிடைமலையே. அதிக வயதில் வாழ்ந்தவர்களிடம் அதிக நாட்கள் வாழ்ந்தது எப்படி என்று கனடா நியூ பவுண்ட் ஆராய்ச்சியாளரான ஜெனடேல், கேட்கும்போது அவர்கள் சொல்லும் காரணம், 'வீட்டிலே முடங்கிக் கிடந்தால் நீண்ட நாட்கள் வாழமுடியாது', பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்ததே என்று ஆச்சரியமாக இருந்ததாக கூறுகிறார்.

ஒரு மனிதன் நல்ல உடல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவன் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆக்கப் பூர்வமான நடவடிக்கையே முக்கியமாகும். எவ்வாறு ஒரு ஓவியன் சிறந்த படைப்பிற்கு காகிதமோ, பாறையோ அல்லது சுவரோ தேவையோ அதேபோன்று தான் அதிக நாட்கள் பல கொடிய நோய்களுக்கிடையே வாழ சில செயல்கள் முக்கியமாகும். அவைகளை கீழே காணலாம்:

1) உங்கள் எடையினை கவனியுங்கள்: 'Annals of Internal Medicine' வரலாற்றுப் பதிவேடுகளில், 'குழந்தைப் பருவத்திலிருந்து அதிக எடையுடன் இருந்தால் அது உங்கள் உயிருக்கு உலை வைக்கும்' என்பது தான். ஆகவே பத்து சதவீத எடையினை குறைத்தால் ஆயுளினை குறைக்கும் நோய்களான, சக்கரை போன்றவற்றைத் தடுக்கும்

2) 2) பல்லை கவனிக்க: பல் போனால் சொல் போகும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பல் நோயினால் இதய நோயும், சக்கரை நோயும் உண்டாகும் என்று டொரோண்டோ பல் சினாய் ஹெல்த் சிஸ்டம் மருத்துவமனை டாக்டர் ஹாவார்டு அவர்கள் கூறுகின்றார். வாயிலுள்ள கிருமிகள் நரம்புகளில் ஊடுருவி நோயினை அதிகப் படுத்தும்' என்று கூறுகிறார்.

3) கண்ணை பொன்போன்று கவனி : 2014ம் ஆண்டு வெளி வந்த Journal of American Medical Association அறிக்கையில் ஒருவர் கண் மங்கினால் உடனே கவனிக்கவேண்டும். ஏனென்றால் வயதானவர்கள் கண் பார்வை மங்க ஆரம்பிக்கும், அப்போது பார்வை தெரிய அதற்கு தேவையான மறுத்துவ சிகிச்சை அளிக்காவிட்டால் வீட்டிலே ஒரு நடை பிணமாகத் தான் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் வீட்டிலே உள்ள பத்திரிக்கையினை படிக்க ஒரு பூத கண்ணாடி உதவினால் கூட தன்னுடைய வயது குறைவாகவே அவர்களுக்கு நினைக்கத் தோன்றும்.

4) மூச்சிப் பயிற்சி அவசியம்: சராசரி ஒரு மனிதனுக்கு 35 வயதினை அடைந்தாலோ மூச்சு விடுதலில் சிரமம் உண்டாகும்.. நுரையீரல் சுருங்கி, விரிந்தால் தான் மூச்சு சீராக வரும். ஆனால் அது குறைந்தால் மூச்சு தினரல் ஏற்படும். Diaphragm என்ற நுரையீரல்-வயிறு இடைப் பகுதி உதரவிதானம் ஆகும். மூச்சு இழுத்து விடும் போது நுரையீரல் கீழ் நோக்கி விரிந்து சுருங்கும். அவ்வாறு நுரையீரல் விரியாவிட்டால் மூச்சு தினரல் ஏற்படும். ஆகவே தான் தினமும் 15 நிமிடங்கள் மூச்சு இழுத்து விடும் பயிற்சி எடுக்கவேண்டும். அதுவும், மரங்கள் நிறைந்த பூங்கா பகுதி, திறந்த வெளியிடங்களில் பயிற்சி எடுப்பது சாலச் சிறந்தது ஆகும்.

5) அதிக மாத்திரைகள் உடலுக்கு ஆபத்து: ஸ்பெயின் நாட்டின் மருத்துவர்கள் 2015ல் நடத்திய ஆய்வின்படி அதிக மாத்திரைகள் உட்கொண்டால் கிட்னி கோளாறு, வயிற்றுப புண் மற்றும் இதய பல பக்க விளைவுகள் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

6) இந்தியாவில் 7 கோடி சக்கரை நோயாளிகள் குறை சொல்லுவது என்னவென்றால் அவர்கள் காலில் ஏற்படும் புண்ணினால் தான் என்று கூறுகின்றனராம். ஆஸ்திரேலியாவில் நடத்தப் பட்ட ஆய்வின் படி சக்கரை நோயினால் காலில் ஏற்படும் புண்ணினால் 15 வருடங்கள் முன்பாகவே இறந்து விடுவதாக கூறுகின்றனர். காலில் வெடிப்பு ஏற்பட்டாலோ, காலில் சிகப்பு நிறம் வந்தாலோ உடனே சம்பந்தப்பட்ட மருத்துவர்களை அணுகி நடவடிக்கை எடுக்கவேண்டுமாம்.

7) வயதாகும்போது எலும்புப் புரை(osteoporosis) நோயால் அவதிப் பட்டு கால்கள் நடக்க முடியாமல் போகும் நிலை உண்டாகும். அதனை சரி செய்ய nitrogen-bisphosphonate வகைகளான மருந்துகள் மூலம 34 சதவீத இறப்புகளை தடுக்க முடியும் என்று ஆஸ்திரேலியாவில் நாட்டில் டார்லிக்ஸ்ட் நகரில் அமைந்துள்ள கார்வான் மெடிக்கல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டறியப் பட்டுள்ளதாம்.

8) ஃப்ளு ஆபத்திலிருந்து தப்பியுங்கள்: இந்தியாவில் செப்டம்பர் மாதத்திலிருந்து பெப்ரவரி மாதம் வரை சளித் தொல்லை அதிகமாக இருக்கும். சளியினால் வருவது தான் ஃப்ளு நோயாகும். ஃப்ளு வந்தால் காய்ச்சல், அதனைத் தொடர்ந்து நிமோனியா, காது வலி, சயன்ஸ் தொந்தரவு, வயிற்றுப் போக்கு, நீர் சத்து குறைதல், ஆஸ்த்மா அல்லது சக்கரை நோய் ஏற்படும். அதனைத் தொடர்ந்து இதய நோயும் வர வாய்ப்புள்ளது. ஒரு தடவை ஃப்ளு வந்து சுகமானாலும் அதன் வைரஸ் நுரையீரல் பகுதியில் தொற்றிக் கொண்டு இருக்கும். ஆகவே சளித் தொல்லை தானே என்று அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது.

9) கழிவுப் பாதை கவனிப்பு: மனிதன் உணவு உட்கொள்ள எவ்வாறு வாய் முக்கியமோ அதே போன்று சாப்பிட்ட உணவு ஜீரணித்து கழிவுகளை வெளியே தள்ள ஆசன வாய் முக்கியம். அந்த ஆசன வாயில் ஏதாவது கட்டி வந்தால் உடனே மருத்துவரை அணுகி, கழிவு DNA பரிசோதனை, கல்சர்(culture) பரிசோதனை நடத்தி புற்று நோய் இல்லை என்பதினை உறுதி செய்ய வேண்டும்.

உணவு வழி வழிமுறைகள்: Journal of the American College of Cardiology ஆய்வின் படி 40 வயதிலிருந்து 75 வயது வரை உள்ள அமெரிக்கர்கள் 87 சதவீதம் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்திருப்பர், அவர்கள் காலை உணவினை சரியான நேரத்தில் எடுத்திராவிட்டால் என்று கூறுகின்றது. ஒரு பழமொழி சொல்வார்கள், 'காலை உணவினை இளவரசர் போல சாப்பிடுங்கள், மதிய உணவினை அரசர் போலவும், இரவு உணவினை ஏழைபோலவும் சாப்பிட வேண்டுமென்று'. காலை உணவினை மறந்தவர் யானை பலத்தினை இழந்தவர் போலாவார்.

2) 70,000 ஜப்பானிய மக்களிடம் நடத்திய ஆய்வின் படி செடிகளிருந்து முளைத்த பீன்ஸ், பருப்பு வகைகள், முழு தானியங்கள் உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வதால் அவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாக கூறுகின்றது. அவர்கள் (Longevity) சராசரி 87.45 வயதில் பெண்களும், 81.41. வயது வரை ஆண்களும் உயிர் வாழ்வதாக கூறப் படுகிறது.

3) சிகப்பு இறைச்சி(Red Meat): சிகப்பு இறைச்சியினை அதிகமாக சாப்பிடுவது உங்களுடைய உயிர் சுமார் 8 வயது குறைந்த ஆபத்து ஏற்படும் என்று Boston நகரில் உள்ள Harvard T.H Chand School Public Health ஆய்வில் கூறுகின்றது. அதே ஸ்கூல் நடத்திய ஆய்வில் சக்கரை அதிகமாக சேர்க்கப் பட்ட குளிர் பானங்கள் தினந்தோறும் குடிப்பது ஆபத்து நிறைந்தவை என்றும் சொல்கின்றது. P.MJ என்ற பத்திரிக்கை 2014ல் நடத்திய ஆய்வில் 20 ஆண்டுகளில் 89,000 பெண்களின் உணவு பழக்கங்களை ஆய்வு செய்தனர். அதில் பதப் படுத்தப் பட்ட இறைச்சி வகைகள் 22 சதவீதம் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

4) நீர் அருந்துவது: சிலர் தண்ணீரினை மருந்துபோல அருந்துவர். நாம் வெப்ப மண்டலத்தில் வாழ்கின்றோம். உடலிலிருந்து வேர்வை, சிறுநீர் வெளியேறும் போது அதனை ஈடு செய்ய நீர் அருந்துவது அவசியம். உங்கள் சிறுநீர் சற்று இல மஞ்சள் நிறத்தில் வெளியேறவில்லை என்றாலும், கருப்பு நிறத்தில் வந்தாலும் நீங்கள் குறைவான நீரினை பருகுகிறீர்கள் என்பது அர்த்தம். ஆகவே சரியான அளவு நீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

5) நவீன உணவு தவிர்: இயற்கையாக சமையல் செய்து சாப்பிடும் பழக்கத்திலிருந்து வேக உலகில் நவீன, ஏற்கனவே தயார் செய்யப் பட்ட உணவினை சூடாக்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்துடன் அதனை தொடர்ந்து உடல் ஆரோக்கியம் கெடவும் செய்கின்றது என்பதை பலர் அறியமாட்டார்கள். 2019ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் 45,000 நடுத்தர மக்களிடம் எடுக்கப் பட்ட ஆய்வில் 'ரெடி டு செர்வ்' உணவினால் பலர் உடல் கோளாறு ஏற்பட்டு இறந்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது. ஏனென்றால் உணவு கெடாமல் இருப்பதற்கு பல வேதியப் பொருட்கள் சேர்ப்பதினால் அதுபோன்ற உடல் உபாதைகள் வருவதாக கூறுகின்றனர்.

6) மது உடலுக்குக் கெடுதி: 2014 ம் ஆண்டு நடத்தப் பட்ட ஆய்வில் மது அருந்துவதால் 14,800 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. 88,000 குடிகாரர்கள் மருத்துவமனைக்கு படையெடுத்திருப்பதும் தெரிகிறது. மது ஸ்பிரிட்டிலிருந்து தயாரிக்கப் படுகின்ற ஆல்ககாலனாதால் உடல் உள் உறுப்புகளை கரையான் போல அரித்து விடும்.

7) நட்ஸ் சாப்பிடுதல்: ஹார்வாட் பல்கலைக் கழக ஆராய்ச்சியில் தினமும் சில வால்நட்ஸ், பாதாம், முந்திரிப் பருப்பு, அத்திப் பழம் போன்றவை சாப்பிட்டால் 30 வருடங்களில் 20 சதவீதம் குறைவாகவே இறப்பார்கள் என்று கூறுகின்றது. 8) வைட்டமின் D: மனிதன் திடகார்த்தமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழ வைட்டமின் D முக்கியம். ஆகவே தான் வெளிநாட்டவர் இந்திய போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு வந்து சூரிய குளியல் செய்கின்றனர் என்பதினைக் காணலாம். நமக்கு இறைவன் இயற்கையிலே சூரிய ஒளியினை கொடுத்துள்ளான். அதனை திறந்த வெளியில் அதிகாலை மற்றும் அந்தி மயங்கும் வேளையிலும் அனுபவிக்க வேண்டும். அதற்காக அதனை கூட்ட பல மருத்துவர்களை மருந்துக்காக நாடக் கூடாது.

9) எறும்புபோல சுறுசுறுப்பாவீர்: 2019 ம் ஆண்டு நார்வே ஸ்கூல் ஆப் சயின்ஸ் நடத்திய ஆய்வில் வீட்டில் தரையினை சுத்தம் செய்வது, கார் அல்லது இரு சக்கர வாகனத்தினை துடைப்பது, வீட்டுத் தோட்டத்திற்கு தண்ணீர் விடுவது, துணைவியாருக்கும் சிறு, சிறு உதவி செய்வது மிகுந்த ஆரோக்கியம் தரும் என்று கூறுன்கிறது. ஜெர்மனி அதிபர் அஞ்சலா மார்கல் 18 வருடம் ஜெர்மனியினை சிறப்புடன் ஆட்சி செய்து 2021 ஜனவரி 19ல் தானாகவே பதவி விலகிய போது நிருபர்கள், 'உங்கள் உடையினை யார் துவைப்பது’ என்று கேட்டபோது, துணிகளை தான் வாஷிங் மெஷினில் அடுக்கி வைப்பதாகவும், தனது கணவர் அதனை துவைத்தப் பின்பு எடுப்பார் என்றும், ‘யார் சமைப்பது’ என்ற கேள்விக்கு, தான் சமைப்பதாகவும், தனது கணவர் சமையலுக்கான காய், கறிகளை நறுக்கித் தருவார் என்றும், வீட்டினை யார் சுத்தம் செய்வது என்ற கேள்விக்கு தான் தான் என்றும், தான் வீட்டில் வேலைக் காரர்களை வைத்துக் கொள்வதில்லை’ என்றும் கூறுவது எதனைக் காட்டுகின்றது என்றால் நாட்டிற்கு ராஜாவானாலும், வீட்டிற்கு பொறுப்பான மற்றும் உறுதுணையான் மனைவியாக இருந்துள்ளார் என்பதனையும் காட்டுகின்றது தானே!

10) விளையாட்டு பயிற்சி: ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா பல்கலைக் கழக மனோதத்துவ நிபுணர், டாக்டர் ஸ்டுவர்ட் மேக் டொனால்டு, பல வயதானவர்கள் பற்றி ஆராயும் போது, வயதானவர்கள் தெரிந்த விளையாட்டினை நண்பர்கள் உடன் விளையாடுவதால் அவர்களுடைய நினைவாற்றல் அதிகப் படுத்துவதுடன், கலகலப்பாகவும் வீட்டில் நடமாடுவதாக கூறுகின்றார். விளையாட்டே தெரியாது என்றாலும் வெளியே நடைப்பயிற்சியில் சில நண்பர்களுடன் கூட செல்வது நல்லது என்றும் தங்களை தனிமைப் படுவத்திலிருந்து காக்கும் என்றும் கூறுகின்றார்.

வேலையினூடே ஓய்வெடுத்தல்: 1) ஒரு மனிதனுக்கு தூக்கம் மிகவும் அவசியம். குறைந்தது ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். இரவில் தொலைக் காட்சி, செல் போன் போன்றவைகளை தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நிறுத்தி விடுங்கள். இரவு விடி விளக்குகள் ஒளி கண்ணைக் கூசும் என்றால் தூங்கும் போது கண்ணுக்கு ஒளி வராமல் தடுக்கும் கட்டையான துணியினை கண்ணில் கட்டிப் படுங்கள். எப்படி விமானத்தில் இரவில் பயணம் செய்யும்போது தூங்குவதற்கு தனி கண் மறைப்பான் கொடுக்கின்றார்களோ அதேபோன்று வாங்கி உபயோகிங்கள்.

2) லான்செட் என்ற குடும்ப பத்திரிக்கையில் 2018ம் ஆண்டு நடத்தப் பட்ட ஆய்வில், அலுவலக வேலையினை வீட்டிற்கு கொண்டுபோய் அதில் கவனம் செலுத்தும் ஆண்கள் 68 சதவீத பேர்களுக்கு இதய நோய் வருகின்றது என்றும். ஆனால் பெண்களை அதுபோன்று பாதிப்பதில்லை என்றும் கூறுகின்றது.

உங்கள் மகிழ்ச்சி தரும் இடங்கள் தேடுங்கள்: 1) நீங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போதோ அல்லது சைக்கிள் பயணம் செய்யும்போதோ மரம், செடி நிறைந்த பகுதிகளில் செல்லவும். அவ்வாறு இயற்கை வளங்களை ரசிக்கும் உங்கள் இறப்பு பத்து வருடங்களில் 10-15 சதவீதம் குறையும் என்று The Lancet Journal அறிக்கை சொல்கிறது.

2) அமெரிக்காவினைச் சார்ந்த John Hopkins பல்கலைக் கழகம் வயதாகுவது மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய 2013ல் நடத்திய ஆராய்ச்சியில், யார் குடும்ப இன்ப-துன்பங்களில் பங்காற்றுகிறார்களோ அவர்கள் உயிர் 18 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றது.

3) அமெரிக்காவின் McMaster பல்கலைக் கழகம் 2019ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தாங்கள் 30 வருடம் தனியாக வசித்துவரும் ஆண்களிடம் நடத்திய ஆய்வில் 23 சதவீதம் தனிமை வாட்டி சீக்கிரமே இறந்து விடுகின்றார்கள். ஆகவே தான் ஆணுக்குப் பெண் துணை என்ற தாரக மந்திரத்துடன் பலர் குடும்பம் நடத்துகின்றனர்.

4) புகை மண்டலத்திலிருந்து தப்பியுங்கள்: அமெரிக்காவில் உள்ள பெர்க்கிலி பல்கலைக் கழக ஆய்வின் படி நீங்கள் புகை பிடிக்காதவர்களாக இருந்தாலும், புகை பிடிப்பவர் அருகில் நீண்ட நாட்கள் இருந்தீர்கள் என்றால் அவர்கள் புகைக்கும் போது அதில் வரும் புகையினை நீங்கள் சுவாசித்தல், அல்லது புகை மண்டல பகுதியில் வாழ்வது உங்கள் ஆயுளை குறைக்கும் என்றும் கூறுகின்றது.

5) உங்களுக்கு வயதாகும்போது மிகவும் வெப்பமான நேரங்களில் வீட்டினுள்ளோ அல்லது உங்கள் அலுவலக கட்டிடத்தினுள்ளோ பெரும்பாலும் இருப்பது சூரிய வெப்ப தாக்குதலிருந்து தப்பிக்க வகை செய்யும்..

மனிதன் உயிர் வாழ்வது நம் கையிலில்லை என்றாலும், மனிதன் புத்திசாலித்தனமாக இருந்தால் இயற்கையிலேயே நீங்கள் அதிக நாட்கள் வாழலாம் எபதினை தான் மேலே குறிப்பிட்ட ஆய்வுகள் கூறுகின்றன அல்லவா?

Tags: கட்டுரை

Share this