Breaking News

தவ்ரத்துல் ஹதீஸ் வகுப்பில் சேர்ந்து ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற அன்புடன் அழைக்கிறோம்..

நிர்வாகி
0

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் தவ்ரத்துல் ஹதீஸ் வகுப்பில் சேர்ந்து ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற அன்புடன் அழைக்கிறோம்.

அல்லாஹ்வின் பேரருளால்

ஒவ்வொரு ஹதீஸிலும் ஃபிக்ஹ் சட்டங்களை தெளிவுபடுத்தப்படும்

வார்த்தைக்கு வார்த்தை பொருளுடன் வாக்கிய அமைப்பின் சொற்றொடர் பொருளுக்கும் பயிற்சி அளிக்கப்படும்

தேவைப் படுகின்ற இடங்களில் ஸர்ஃப், நஹ்வு கலையில் விபரங்களுடன் மொழித்திறனும் மேம்படுத்தப்படும்

ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கும் தக்வா நிறைந்த மூத்த ஆசிரிய பெருந்தகைகளால் பாடங்கள் நடத்தப்படுகின்றன

நமது ஜாமிஆவின் ஷைகுல் ஹதீஸாக ஹதீஸ்கலை வல்லுநர் அல்லாமா A.E.M.அப்துர்ரஹ்மான் ஹள்ரத் அவர்கள் செயல்படுகிறார்கள்.

புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவுத், நஸாயீ, இப்னு மாஜா என்ற ஸிஹா ஸித்தா நூல்களும் முஅத்தா மாலிக், முஅத்தா முஹம்மது, முஸ்னத் இமாமுல் ஆலம், ஷரஹ் மஆனில் ஆசார் போன்ற ஹதீஸ் கலை நூல்களும் கற்பிக்கப்படுகின்றன

ஆண்டின் இறுதியில் மவ்லவி, பாஜில் மன்பயீ சனது வழங்கப்படும்

சனதைப் பெற்றவர்கள் கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் வரை ஹதீஸ்களுக்கு ஹதீஸ் தொடர் இணைப்பு கிடைத்து பெரும் பாக்கியம் பெற்றவர்களாக ஆகுவார்கள்

தவ்ரத்துல் ஹதீஸ் மாணவர்களுக்காக சுகாதாரமான காற்றோட்டமான பிரத்தியேக தங்கும் அறைகள்

மவ்லவி ஆலிமாக ஆன பிறகு வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை விட்டு விட்டு கல்விக்காக தியாகம் செய்து வந்ததிற்காக வழமை போல் மாதந்தோறும் ஊக்கத்தொகையாக 1000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது

நமது ஜாமிஆவின் காலம் சென்று விட்ட மூத்த ஆசிரிய பெருந்தகைகளின் பரகத்கள் துஆ க்கள் கிடைக்கும்

எனவே ஆர்வத்துடன் வந்து தவ்ரத்துல் ஹதீஸ் வகுப்பில் சேருங்கள் ஒரு வருடத்தை மட்டும் தியாகம் செய்யுங்கள்

இதனால் கிடைக்கும் பலன் இன்ஷா அல்லாஹ் நீங்கள் அனுபவ ரீதியாக பெற்றுக் கொள்வீர்கள்

இப்போது தொலைபேசி மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.

தவ்ரத்துல் ஹதீஸ் வகுப்பில் சேர விரும்பும் மவ்லவி ஆலிம் சனது பெற்றவர்கள் தாங்களின் பெயர், ஆலிம் சனது பெற்ற மத்ரஸா பெயர், முகவரி,மற்றும் தொலைபேசி எண் ஆகிய விபரங்களுடன் 94436 66063 என்ற WHAT'S UP ல் பதிவு செய்யுங்கள்

ஜாமிஆவின் திறப்பு தேதி இன்ஷா அல்லாஹ் பின்பு அறிவிக்கப்படும்

இப்படிக்கு

முதல்வர்,

ஜாமிஆ மன்பஉல் அன்வார், லால்பேட்டை

Tags: லால்பேட்டை

Share this