லால்பேட்டை நகரில் புதிய அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) வாங்குவதென நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு !
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அவசர ஆலோசனை கூட்டம் 24/5/2021 திங்கள் கிழமை மாலை மக்ரிஃப் தொழுகைக்கு பின்னர் புதுபஜார் நகர அலுவலகத்தில் நடைபெற்றது.
நகர தலைவர் எஸ்.எம். அப்துல் வாஜிது தலைமை வகித்தார்.
நகர செயலாளர் எம். ஹெச். முஹம்மது ஆசிப், நகர பொருளாளர் ஏ.முஹம்மது தைய்யூப் முஹிப்பி, மாவட்ட துணை தலைவர் அனீசுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய கவுன்சில் உறுப்பினர் எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, நகர துணை செயலாளர் அமானுல்லா இருவரும் கருத்துரை வழங்கினர்.
மாவட்ட முஸ்லிம் யூத் லீக் பொருளாளர் முபாரக், எம்.எஸ்.எஃப் மாநில பொருளாளர் அஹமது, நகர நிர்வாகிகள் முஹம்மது சித்தீக், எம்.ஹெச்.முஹிப்புல்லா, ஏ.சாதுல்லா, எம்.ஹெச்.முஹம்மது நாசர், நகர எம்.எஸ்.எஃப் தலைவர் ஏ.கே.முஹம்மது அஸ்கர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் லால்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் அவசிய மருத்துவ உதவிக்காக அனைத்து வசிகளுடன் கூடிய புதிய அவசர ஊர்தியை (ஆம்புலன்ஸ்) வாங்குவதென்றும், ஆம்புலன்ஸை கட்சியின் பெயரில் மாநில தலைமை வழிகாட்டுதல் படி பதிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
Tags: லால்பேட்டை