Breaking News

ஸ்டாலின் ஆளுமையும், ஆற்றலும், பணிவும்மிக்க வியத்தகு தலைவர் : ரவூப் ஹக்கீம் வாழ்த்து

நிர்வாகி
0

ஸ்டாலின் ஆளுமையும், ஆற்றலும், பணிவும்மிக்க வியத்தகு தலைவர்

ட்விட்டரில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்து

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், ஆளுமையும், ஆற்றலும், பணிவும்மிக்க வியத்தகு தலைவரென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவியேற்பிற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் விடுத்துள்ள ட்விட்டர் வாழ்த்துப் பதிவிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அப்பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும், தோழமைக் கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு அவர் அமைத்துள்ள ஆட்சியும், அவரது திராவிடக் கொள்கைப் பற்றும் அபாரமானவை எனவும், அவர் ஆளுமையும், ஆற்றலும் , பணிவும்மிக்க வியத்தகு தலைவர் எனவும் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags: செய்திகள்

Share this