Breaking News

லால்பேட்டையில் கண்ணியமிகு காயிதே மில்லத் ரஹ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் விழா !

நிர்வாகி
0

லால்பேட்டையில் கண்ணியமிகு காயிதே மில்லத் ரஹ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் முஸ்லிம் லீக் கொடி ஏற்று விழா மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை கஞ்சி வழங்கும் விழா !

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிறுவன தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் ரஹ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் புதுபஜார் அலுவலகத்தில் 5/6/2021 சனிக்கிழமை கட்சியின் கொடி ஏற்றும் விழா மற்றும் கொரோன நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகர தலைவர் எஸ். எம். அப்துல் வாஜிது தலைமை வகித்து நட்சத்திரம் பத்திந்த பச்சிளம் பிறைக்கொடியை ஏற்றி வைத்தார்.

மூத்த தலைவர் மவ்லவி அமீனுல் ஹுஸைன் மன்பஈ துஆ செய்தார்.

செயலாளர் எம். ஹெச். முஹம்மது ஆசிப் அனைவரையும் வரவேற்றார்.

தேசிய கவுன்சில் உறுப்பினர் ஏ. எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை கஞ்சியினை பொதுமக்ககுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

நகர பொருளாளர் ஏ. முஹம்மது தைய்யூப் முஹிப்பி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் ஜமாத்தார்கள் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை செயல்வீரர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.

Tags: லால்பேட்டை

Share this