முதல்வர் பொது நிவாரண நிதி’க்கு ஜமாஅத்துல் உலமா சபை நிதி அளித்தது.
நிர்வாகி
0
தமிழக அரசின் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரிடம் 24,20,110 ( இருபத்து நான்கு இலட்சத்து இருபது ஆயிரத்து நூற்றி பத்து) ரூபாய்க்கான காசோலை ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் இன்று 01.06.2021 வழங்கப்பட்டது. “முதல்வர் பொது நிவாரண நிதி’ க்கு வழங்கப்பட்ட இந்தப்பணம் மிகச்சாதாரண மாத ஊதியத்தில் பணியாற்றும் கண்ணியமிக்க ஆலிம்களிடமிருந்து மட்டுமே பெறப்பட்டது“
என்று நம் சபையின் தலைவர் முதல்வரிடம் எடுத்துரைத்தார்.
மனிதாபிமானத்துடன் வழங்கப்பட்ட இந்நிதிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மிகுந்த நன்றியுடன் பெற்றுக்கொண்டார்.
Tags: சமுதாய செய்திகள்