ஆயங்குடியில் நடைபெற்ற மஸ்ஜித் இஸ்லாம் பள்ளிவாசல் திறப்பு விழா சமய நல்லிணக்கப் பெருவிழா
கடலூர் மாவட்டம் ஆயங்குடி அருகே உள்ள குணவாசலில் மஸ்ஜிதுல் இஸ்லாம் எனும் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா, மற்றும் சமய நல்லிணக்கப் பெருவிழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் நிருவனரும் அபூபக்கர் கல்வி சமூக அறக்கட்டளை தலைவருமாகிய இனியவன் ஹாஜிமுஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார் சிங்கப்பூர் இல்ல வனிக குழுமங்களின் இயக்குனர் ஜாபர்அலி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக லால்பேட்டை அரபுக் கல்லூரி முதல்வரும் கடலூர் மாவட்ட அரசு காஜியுமாகிய நூருல்அமீன் ஹஜ்ரத் கலந்துகொண்டு புதிய பள்ளிவாசலை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் தவத்திரு .திருவடிக்குடில் சுவாமிகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி,சோழபுரம் தலைமை இமாம் மஹ்மூதுல் ஹசன், ஆயங்குடி பெரிய பள்ளிவாசல் இமாம் அப்துல்ஜப்பார், அறக்கட்டளை பொருளாளர் தமிமுன்அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அறக்கட்டளை செயலாளர் முஹம்மது இக்பால் நன்றி கூறினார் .
Tags: சமுதாய செய்திகள்