Breaking News

சிறைவாசிகளின் விடுதலைக்கு புதிய சட்டம் இயற்ற வேண்டும் தேசிய லீக் மாநில தலைவர் எம் பஷீர் அஹமது மனு

நிர்வாகி
0

சிறைவாசிகளின்_விடுதலைக்கு_புதிய_சட்டம்_இயற்ற_வேண்டும் இந்திய தேசிய லீக் மாநில தலைவர் அல்ஹாஜ் எம் பஷீர் அஹமது அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் #மு_க_ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

கோரிக்கை மனுவில்....

தமிழகத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாழக்கூடிய சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி எல்லாம் வல்ல இறைவனின் நல்லருள் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

சமுதாயத்தில் முக்கியமான ஒரு கோரிக்கையை உங்களுடைய கனிவான பார்வைக்கு சமர்பிக்கிறேன். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாழக்கூடிய சிறைவாசி மக்களை விடுதலை செய்ய வேண்டும்.

சிறைவாசிகளை விடுதலை செய்ய ஒரு புதிய சட்டம் இயற்றி எந்த ஜாதியாக இருந்தாலும் ஆயுள் தண்டை காலம் 14 ஆண்டுகாலமாக வரையறுத்து சட்ட முன் வடிவம் எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்ககூடிய இஸ்லாமிய சமுதாய மக்களையும் இன்ன பிற சமூக மக்களையும் தங்களுடைய அரசு கருணை கூர்ந்து மேற்படி சட்டத்தை வரையறுத்து விடுதலை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

முதல்வருடன் சந்திப்பின் போது இந்திய தேசிய லீக் மாநில துணை தலைவர் நூர்தீன் அவர்களும் இந்திய தேசிய லீக் மாநில பொருளாளர் எம்.குத்தூஸ்_ராஜா அவர்களும் உடன் இருந்தனார்.

Tags: செய்திகள்

Share this