த மு மு க ஹாஜா கனி மர்ஹூம் மெளலானா தளபதி ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களின் இல்லம் வருகை
மறைந்த மெளலானா தளபதி ஷஃபீகுர் ரஹ்மான் அவர்கள் மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்க 15/07/2021 அன்று த மு மு க மாநில பொதுச் செயலாளரும், சென்னை காயிதே மில்லத் கல்லூரி தமிழ்த்துறை தலைவருமான பேராசிரியர் ஹாஜா கனி அவர்கள் மர்ஹூம் மெளலானா தளபதி ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களின் இல்லம் வருகை தந்து அவரின் புதல்வரும் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினருமான எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி மற்றும் குடும்பத்தினர்களிடமும், இ.யூ. முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளிடமும் மெளலானா தளபதி ஹஜ்ரத் அவர்களின் சேவைகளின் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.
லால்பேட்டை நகர இ.யூ. முஸ்லிம் லீக் நிர்வாகிகள், தமுமுக மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பொது வாழ்வில் மணி விழா கண்ட காயிதே மில்லத் கண்டெடுத்த தளபதி நூலை பேராசிரியர் ஹாஜா கனி அவர்களுக்கு நகர முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் வாஜிது, செயலாளர் ஆசிப் ஆகியோர் வழங்கினர்.
Tags: லால்பேட்டை