கடலூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு
எஸ்டிபிஐ கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பொதுக்குழு மாவட்ட தலைவர் M.A.ஹமீத் ஃப்ரோஜ் அவர்கள் தலைமையில் 12.8.2021 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் M.நிஜாம் முஹைதீன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2018-2021 கான மாவட்ட செயற்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆண்டறிக்கை மாநில பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் வாங்கப்பட்டது. மேலும் கட்சியின் வளர்ச்சி கருதி கடலூர் மாவட்ட நிர்வாகம் இரண்டு நிர்வாகங்களாக (கடலூர் கிழக்கு மாவட்டம் மற்றும் கடலூர் மேற்கு மாவட்டம்) என மாநில பொதுச்செயலாளர் அவர்களால் பிரித்து நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது.
கடலூர் கிழக்கு புதிய மாவட்ட தலைவராக M.A.ஹமீத் ஃப்ரோஜ் அவர்களும், மாவட்ட துணை தலைவராக I.சர்புதீன் ஷரீப் அவர்களும், பொதுச்செயலாளராக B.ஹிதாயத்துல்லா அவர்களும், மாவட்ட செயலாளர்களாக முகமது அலி, முஹம்மது நாசர் அலி மற்றும் ஜாகீர் உசேன் அவர்களும், பொருளாளராக மக்பூல் அஹமது அவர்களும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக அன்சாரி மற்றும் நூருல்லா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதேபோல் கடலூர் மேற்கு புதிய மாவட்ட தலைவராக A.கமாலுதீன் அவர்களும், துணை தலைவராக அபுசாலி அவர்களும், பொதுச்செயலாளராக S.ரஹமத்துல்லா அவர்களும் மாவட்ட செயலாளராக M.முஜிபுர்ரஹ்மான் அவர்களும் பொருளாளராக முஹம்மது ஹனீப் அவர்களும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக S.முஜிபுர்ரஹ்மான் மற்றும் நவ்ஷாத் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.
Tags: செய்திகள்