2021 ஆம் ஆண்டிற்கான எஸ்.டி.பி.ஐ கட்சியின் விருதுகள் பெறும் ஆளுமைகளின் பெயர்கள் அறிவிப்பு
நிர்வாகி
0
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சாதனையாளர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகின்றது எஸ்.டி.பி.ஐ. கட்சி. சிறந்த பொதுநல தொண்டுக்காக காயிதேமில்லத் விருதும், சிறந்த மனித உரிமை களப்பணிக்காக தந்தை பெரியார் விருதும், ஒடுக்கப்பட்டோர் நலன் உழைப்பிற்காக டாக்டர் அம்பேத்கர் விருதும், சிறந்த கல்விச் சேவைக்காக காமராசர் விருதும், தமிழ் இலக்கியம் மற்றும் சிறந்த எழுத்து ஆளுமைக்காக கவிக்கோ விருதும், சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்காக நம்மாழ்வார் விருதும், சிறந்த சமூக சேவைக்காக அன்னை தெரசா விருதும், ஃபாசிச மற்றும் மதவெறி சக்திகள் எதிர்ப்பு களத்தில் பழனிபாபா விருதும் வழங்கி வருகின்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2021) விருதுகளை பெறுவோர்களை தேர்ந்தெடுக்க விருது கமிட்டி குழுவும் அமைக்கப்பட்டது.
அந்த குழு கீழ்கண்ட நபர்களை விருதுக்காக தேர்வு செய்துள்ளது:
விருதுகளும் – பெறுபவர்களும்
1. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் விருது : திரு. இப்னு சவூத், (தலைவர், ஆல் இந்தியா மில்லி கவுன்சில்)
2. தந்தை பெரியார் விருது : மறைந்த அருட்தந்தை ஸ்டேன்சாமி
3. டாக்டர் அம்பேத்கர் விருது : திரு. கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ். (ஓய்வு)
4. பெருந்தலைவர் காமராஜர் விருது : அகரம் ஃபவுண்டேஷன்
5. ஷஹீத் பழனிபாபா விருது : தோழர் ராமகிருட்டிணன் (பொதுச்செயலாளர், தந்தை பெரியார் திராவிட கழகம்)
6. கவிக்கோ விருது : ஆலிம் கவிஞர் தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி (பேராசிரியர் ஜே.எம்.கே.அரபிக்கல்லூரி)
7. அன்னை தெரசா விருது : திருமதி டாக்டர் அனுராதா, பொன்னேரி
8. ஐயா நம்மாழ்வார் விருது : திரு. சா. காதர்மீரான் (இயற்கை விவசாயி) சித்தையன்கோட்டை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் 18 அன்று சென்னையில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags: செய்திகள்