வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் அவர்களை கண்டித்து லால்பேட்டை நகர இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்குழு தீர்மானம்!
நிர்வாகி
0
லால்பேட்டை நகருக்கு இன்று 5/9/2021 வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் மற்றும் வக்ப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகளை அவமதித்தும், முபாரக் ஜூம்ஆ மஸ்ஜித் வரவேற்பை தவிர்த்தும், கட்சி கொடி ஏற்ற மறுத்தும் கட்சி விட்டு வெளியேறிய கூட்டத்தோடு இணைந்து கட்சியினரை அவமதித்தும் நடந்துக்கொண்ட விதம் கட்சியினரையும், பொதுமக்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனால் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்ட கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டத்தில் எம். அப்துல் ரஹ்மான் அவர்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட தலைவர் ஏ. முஹம்மது ஜெக்கரியா, செயலாளர் ஏ. சுக்கூர் ஆகியோர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாரம்பரியமிக்க லால்கான் மஸ்ஜித் அருகில் முஸ்லிம் லீக் கட்சி கொடி ஏற்ற மறுத்த அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு பதிலாக நகர செயலாளர் எம்.ஹெச். முஹம்மது ஆசிப் தொண்டர்கள் தக்பீர் முழங்க கொடி ஏற்றி வைத்தார்.
இங்ஙகனம்:
எஸ்.எம். அப்துல் வாஜிது, நகர தலைவர்
எம். ஹெச். முஹம்மது ஆசிப், நகர செயலாளர்
ஏ. முஹம்மது தையூப் முஹிப்பி, நகர பொருளாளர்
Tags: லால்பேட்டை