லால்பேட்டை ஜாமிஆவில் தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருக்கு வரவேற்பு
நிர்வாகி
0
தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவரும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவருமான அப்ஜலுல்-உலமா Dr M. அப்துல் ரஹ்மான் M.A , Ex MP அவர்களுக்கு பாரம்பரியமிக்க தென்னகத்தின் ஞான கலைக் கூடமாம் லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபிக்கல்லூரியின் நிர்வாகத்தின் சார்பில் லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் மாபெரும் பாராட்டு & வரவேற்பு நிகழ்வு 05.09.2021 அன்று காலை நடைபெற்றது.
கடலூர் மாவட்ட தமிழ் நாடு அரசு காஜி, ஜாமிஆவின் முதல்வர் மவ்லானா ,மவ்லவி, ஹாபிழ் A. நூருல் அமீன் மன்பயீ ஹள்ரத் அவர்கள் தலைமை வகித்தார்கள் ஜாமிஆ மன்பஉல் அன்வார் நிர்வாகக்குழுவின் தலைவர் அல்ஹாஜ் S.J.அப்துல் ஹமீது, செயலாளர் ஹாஜி K. Aஅமானுல்லாஹ், பொருளாளர் ஹாஜி S.A. அப்துல் அஹத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் மவ்லானா மவ்லவி M.Y.முஹம்மது அன்சாரி மன்பயீ ஹள்ரத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்
லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாளர் மவ்லானா மவ்லவி
S.A. ஜமால் அஹமது மன்பயீ அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
ஜாமிஆவின் மாணவர் ஹாபிழ் சையத் அன்வர் அவர்கள் திருமறை வசனங்கள் ஓதினார்கள்
இந்நிகழ்வில் ஜாமிஆ மன்பஉல் அன்வார் நிர்வாக குழு உறுப்பினர்கள், அனைத்து பள்ளி முத்தவல்லிகள், ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் பேராசிரியர்கள்,சங்கைமிகு உலமா பெருமக்கள், மாணவச் செல்வங்கள், ஜமாஅத் பெரியோர்கள், லால்பேட்டை சமுதாய பிரமுகர்கள் என் ஏராளமானோர் திரளாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுக்கு பிறகு ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் மூத்த பேராசிரியர் ஷைகுல் ஹதீஸ் மவ்லானா மவ்லவி A.E.M அப்துர் ரஹ்மான் ஹள்ரத் அவர்களை வக்ஃப் வாரிய தலைவர் M. அப்துர் ரஹ்மான் MA., Ex MP அவர்கள் மாறியதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார்
Tags: லால்பேட்டை