லால்பேட்டையில் டெல்லி காவல் துறையில் பணியாற்றிய சாபியா ஷைபி கூட்டு கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிர்வாகி
0
டெல்லி காவல் துறையில் பணியாற்றிய சாபியா ஷைபி கூட்டு கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், இதுவரை குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் லால்பேட்டை SDPI கட்சியின் சார்பில் இன்று (10.09.2021 ) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காட்டுமன்னார்குடி தொகுதி தலைவர் அஹமதுல்லா அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மக்பூல் அஹமது, மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல்லா உட்பட தொகுதி,நகர,கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் NWF மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரி ரஜியா பேகம் அவர்களும், SDPI கடலூர் (கிழக்கு) மாவட்ட துணை தலைவர் சர்புதீன் ஷரீப் அவர்களும், #PFI_கடலூர் மாவட்ட தலைவர் ஃபயாஸ் அஹமது மன்பயீ அவர்களும் கலந்துக்கொண்டு கண்டன உரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான #பெண்கள் உட்பட பொதுமக்கள் கலந்துக்கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இறுதியாக #காட்டுமன்னார்குடி தொகுதி பொருளாளர் நிஜார் அஹமது நன்றியுரையாற்றினார்.
Tags: லால்பேட்டை