அஸ்ஸாமை பாசிச ஆட்சியில் இருந்து காப்பாற்றுவோம்! சிதம்பரத்தில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
நிர்வாகி
0
அப்பாவி மக்களின் மீதான அஸ்ஸாம் காவல்துறை மற்றும் அதன் கூட்டாளிகளால் நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை கண்டித்து SDPI கட்சியின் சார்பாக நீதி கோரி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது..
அதன் ஒரு பகுதியாக கடலூர்(கிழக்கு) மாவட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இன்று (24.09.2021) மாலை சிதம்பரம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லா அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஹமீத் ஃப்ரோஜ் மற்றும் மாவட்ட துணை தலைவரும் மாநில பேச்சாளருமான சர்புதீன் ஷரீப் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும் இந்த ஆர்ப்பாட்த்தில் சிதம்பரம் நகர தலைவர் துஃபைல் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் தொகுத்து வழங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முஹமது அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் காசிம் மன்பயீ மற்றும் நூருல்லா, தொகுதி தலைவர்கள் அஹமதுல்லா, அப்துல் கபூர் மற்றும் ஷபீர் அஹமது உட்பட கட்சியின் தொகுதி,நகர,கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த ஆர்பாட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக சிதம்பரம் தொகுதி தலைவர் அன்சாரி நன்றியுரையாற்றினார்.
Tags: செய்திகள்