Breaking News

திரிபுரா வன்முறை தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்..!

நிர்வாகி
0
கடலூர் (கிழக்கு) மாவட்டம் கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகில் திரிபுராவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தாக்குதலை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லா அவர்கள் தலைமை தாங்கினார் கடலூர் தொகுதி செயலாளர் பாரூக் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர்கள் முஹம்மது அலி, ஜாஹிர் உசேன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல்லா, தொகுதி தலைவர்கள் அஹமதுல்லா,அன்சாரி நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். SDPI கடலூர் (கிழக்கு) மாவட்ட தலைவர் ஹமீத் ஃப்ரோஜ் அவர்கள் மாவட்ட துணை தலைவர் ஷர்புதீன் சரீப் அவர்களும் திரிபுரா தாக்குதல் சம்பவங்களை கண்டித்து கண்டன உரையாற்றினார்.
இறுதியாக நகர தலைவர் முஹம்மது காசிம் மன்பயீ அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இப்போராட்டத்தில் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் 75 ற்கும் மேற்பட்டோர் திரிபுரா தாக்குதலை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags: செய்திகள்

Share this