சிதம்பரம் SDPI கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!
நிர்வாகி
0
உத்தர பிரதேசத்தில் விவசாயிகளை பிஜேபி அமைச்சரின் மகன் காரை ஏற்றி கொன்றதை கண்டித்தும், காவல்துறையால் துப்பாக்கியால் 9 விவசாயிகள் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்தும் இன்று (05.10.2021) மாலை SDPI கட்சி கடலூர்(கிழக்கு)மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் ஹமீத் ஃப்ரோஜ் அவர்கள் தலைமையில் சிதம்பரம் காந்தி சிலை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லா அவர்கள் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் தொகுத்து வழங்கினார். மாவட்ட துணை தலைவரும் மாநில பேச்சாளருமான ஷர்புதீன் சரீப் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர்கள் முஹம்மது அலி, முஹம்மது நாசர் அலி உட்பட மாவட்ட தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இறுதியாக #சிதம்பரம் தொகுதி தலைவர் அன்சாரி நன்றியுரையாற்றினார்.
Tags: செய்திகள்