லால்பேட்டையில் நடைபெற்ற 178வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா..!
நிர்வாகி
0
லால்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் லால்பேட்டை நகரம் சார்பில் மாவட்ட தலைவர் ஹாரீஸ் தலைமையில் நடைபெற்ற 178 வது ஆம்புலன்ஸ் (அவசர சிகிச்சை ஊர்தி) அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிப்பு விழா நேற்று 14.11.2021 மாலை நடைபெற்றது .
நிகழ்ச்சில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் ஆம்புலன்ஸ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் .
இந்நிகழ்வில் மமக பொதுச்செயலாளரும் ,மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது , விசிக பொதுச்செயலாளரும் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் , காங்கிரஸ் துணைத் தலைவர் மணிரத்தினம்,கடலூர் மாவட்ட அரசு காஜி நூருல் அமீன் ஹஜ்ரத்,மமக துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் அமைப்பு செயலாளர் ஜைனுல் ஆபிதீன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
Tags: லால்பேட்டை