அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் சார்பாக மௌலானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களுக்கு காயிப் ஜனாசா தொழுகை மற்றும் இரங்கல் கூட்டம்
நிர்வாகி
0
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் சார்பாக மறைந்த நமது லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் மர்ஹூம் ஷைகுல் ஹதீஸ் மௌலானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களுக்கு காயிப் ஜனாசா தொழுகை மற்றும் இரங்கல் கூட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வல்ல ரஹ்மானின் கிருபையால் இன்று 14/11/2021 ஞாயிற்று கிழமை இஷா தொழுகைக்கு பிறகு இந்தியன் இஸ்லாமிக் சென்டர் மினி ஹாலில் மறைந்த மர்ஹூம் ஷைகுல் ஹதீஸ் மௌலானா ஏ இ எம் அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களின் மறுமை வாழ்விற்காக யாசீன் ஓதி துவா செய்யப்பட்டது மற்றும் அவர்களின் நற்செயல்களை நினைவு கூர்ந்து அவர்களின் தியாகங்களையும் எடுத்துறைத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும் உலமாக்களுக்கும் நமது ஜாமியா மன்பவுல் அன்வார் பேராசிரியர்களுக்கும் மற்றும் நம் ஊர் மக்களுக்கும் வல்ல ரஹ்மான் ஷஃப்ரன் ஜமீலா எனும் அழகிய பொருமையை தந்தருலவும் துவா மஜ்லிஸ் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து ஹஜ்ரத் அவர்களுக்கு காயிப் ஜனாசா தொழுகை நடத்தப்பட்டு அவர்களுக்காக துவா செய்யப்பட்டது. இந்த நிகழ்வை சிறப்போடு நடத்திய ஜனாப் காயல் ஹூசைன் மக்கி மல்ஹரி ஹஜ்ரத் அவர்களுக்கும் மற்றும் இந்த நிகழ்வை குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கும் மற்றும் எங்களுடைய அழைப்பை ஏற்று வருகை தந்த நமது ஊரின் மைந்தர்களுக்கும் மற்றும் உலமாக்களுக்கும் ஜமாஅத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
இங்ஙனம்
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்
Tags: லால்பேட்டை