Breaking News

லால்பேட்டை பேரூராட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் ஏணி சின்னத்தில் போட்டி நகர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

நிர்வாகி
0
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லால்பேட்டை நகர செயற்குழு கூட்டம் 30/11/2021 செவ்வாய்க்கிழமை மஃரிப் தொழுக்கைகுப் பின் ரஹ்மானியா வீதி மஹ்தியா மன்ஜிலில் நகர தலைவர் எஸ்.எம். அப்துல் வாஜிது தலைமையில் நடைபெற்றது.
நகரச் செயலாளர் எம்.ஹெச். முஹம்மது ஆசிஃப், துணைத் தலைவர்கள் எஸ். முஹம்மது ஹாமிது, கே.எஸ். சஃபியுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மவ்லவி எஃப். முஹம்மது தவ்ஃபீக் மன்பஈ இறைவசனங்களை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். நகர பொருளாளர் ஏ. முஹம்மது தைய்யூப் முஹிப்பி வரவேற்றுப் பேசினார்.
லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் பகுதி வார்டு தலைவர் மவ்லவி எம். முஹம்மது அய்யூப் மன்பஈ கருத்துரையாற்றினார்.
தலைமை நிலைய மண்டல பொறுப்பாளர் மவ்லவி ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி உறுப்பினர் சேர்ப்புப் பணி - உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1) இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் உறுப்பினர் சேர்ப்புப் பணியை லால்பேட்டை நகரில் விரைவுப்படுத்தி நிறைவுபடுத்துவது.
தீர்மானம் 2) கடந்த 20/11/2021 அன்று லால்பேட்டை நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற சமுதாய ஒற்றுமை விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்த தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எக்ஸ்.எம்.எல்.ஏ., பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மேலிடப் பொறுப்பாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி உள்ளிட்ட மாநில - மாவட்ட - நகர நிர்வாகிகளுக்கும், சமுதாய பிரமுகர்கள் - உலமாக்கள் - முத்தவல்லிகள் - சமுதாய பெருமக்கள் உள்ளிட்டோருக்கும், விழாவிற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்த லால்பேட்டை நகர நிர்வாகிகள், ஒத்துழைப்பு நல்கிய கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3) நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், லால்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்புகளுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் ஏணி சின்னத்தில் போட்டியிடுவது எனவும், கூட்டணி அமைந்து தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் போட்டியிடுவது எனவும், தனித்து போட்டியிடும் சூழல் ஏற்பட்டால் பரவலாக போட்டியிடுவது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
உறுப்பினர் சேர்ப்புப் பணி, உள்ளாட்சித் தேர்தல் ஆகியவைகள் குறித்து கலந்துரையாடப்பட்ட இக்கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம். அனீசுர் ரஹ்மான், தலைமை நிலைய பேச்சாளர் யூ. சல்மான் ஃபாரிஸ், எம்.எஸ்.எஃப். மாநில பொருளாளர் ஏ.எஸ். அஹ்மத், நகர கௌரவ ஆலோசகர்கள் கவிஞர் ஏ.எம். முஹிப்புல்லாஹ், எம்.ஹெச். முஹிப்புல்லாஹ், பி.எம். மஸ்ஊத் அஹ்மத், நகர துணைச் செயலாளர்கள் எம்.எஸ். முஹம்மது சித்தீக், எஸ்.ஏ. அபுஸ்ஸுஹுத், நகர பிரமுகர்கள் எஸ். பக்கீர் முஹம்மது, மவ்லவி எம்.ஏ. அமீனுல் ஹுசைன், ஏ.ஆர். சஃபியுல்லாஹ், லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி வி.ஏ. அப்துர் ரஹ்மான், ஏ. உபைதுர் ரஹ்மான், ஏ.ஏ. சாதுல்லாஹ், டி. முஹம்மது ஃபாரூக், எம். ஹெச். முஹம்மது பஷீர், கே. அப்துல் மாலிக், மவ்லவி ஏ. ரஹ்மத்துல்லாஹ் ஜமாலி, எம்.ஐ. இம்தாதுல்லாஹ், மாவட்ட இளைஞரணி பொருளாளர் எம். முஹம்மது முபாரக், நகர இளைஞரணி செயலாளர் ஏ.ஆர். சிராஜுத்தீன், இளைஞரணி துணைச் செயலாளர் எம். ஹிதாயத்துல்லாஹ், இளைஞரணி பொருளாளர் கே.ஏ. நஜியுல்லாஹ், மாணவரணி நகர தலைவர் ஏ.கே. முஹம்மது அஸ்கர், செயலாளர் ஏ. அசாருத்தீன், துணைத் தலைவர்கள் என். முஸாஹிர், எம்.எஸ். நஸ்ருல்லாஹ், நகர தொழிலாளர் அணி எஸ்.ஹெச். முஹம்மது ஹசன், நகர ஊடகப்பிரிவு ஹெச்.எஸ். முஹம்மது ஹாஷிம், ஏ.எஸ். முஹம்மது இஸ்மாயில், அஜார், எம். ஆஷிக் அலி, அஸ்ஃபர், இத்ரிஸ் ஜே.ஹெச். நகர் பிரைமரி தலைவர் ஜே. ஜாகீர் ஹுசைன், செயலாளர் மவ்லவி இர்ஃபானுல்லாஹ் மன்பஈ, இளைஞரணி தலைவர் ஆரிஃப்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
லால்பேட்டை பேரூராட்சி உறுப்பினர் பொறுப்புகளுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடுவதற்கு கட்சியினர், மேலிடப் பொறுப்பாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானியிடம் 1000 ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
நகர துணைச் செயலாளர் எம். அமானுல்லாஹ் நன்றி கூற, மவ்லவி எம்.எஸ். இஸ்மத்துல்லாஹ் மன்பஈ துஆவுக்குப் பின் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

Tags: லால்பேட்டை

Share this