Breaking News

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டி ஆலோசனை கூட்டத்தில் முடிவு!

நிர்வாகி
0
லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுவது எனவும், கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி இறுதி முடிவு மேற்கொள்வது எனவும் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டத்தில் முடிவு!
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம் 03/11/2021 புதன்கிழமை மாலை நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது அவர்கள் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மௌலவி தவ்பீக் அஹமது அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
நகர செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆசிப் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட துணை தலைவர் எஸ்.எம்.அனீசுர் ரஹ்மான், நகர துணை செயலாளர் அமானுல்லா, தலைமை நிலைய பேச்சாளர் யூ.சல்மான் பாரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலிட மண்டல பொறுப்பாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி கட்சியின் உறுப்பினர் சேர்ப்பு பணி குறித்தும், பேரூராட்சி மன்ற தேர்தல் நிலமை குறித்தும் உரையாற்றினார்.
நகர பொருளாளர் ஏ.முஹம்மது தைய்யூப் முஹிப்பி நன்றி கூறினார். மவ்லானா அமீனுல் ஹுசைன் மன்பஈ துஆ ஓதினார்.
கூட்டத்தில் கட்சியின் நகர நிர்வாகிகள், மாணவரணி, இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
1) லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடுவது எனவும், கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி இறுதி முடிவு மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
2) அஇஅதிமுக மற்றும் பிற கட்சிகளில் இருந்து விலகி தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் முன்னிலையில் விரைவில் கட்சியில் இணைய உள்ளோரின் இணைப்பு விழாவை லால்பேட்டை நகரில் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
3) நவம்பர் 10 அன்று கட்சியில் இணைய உள்ளோருடன் அறிமுக நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
4) லால்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமடைந்துள்ளது. லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் அதை உடனடியாக சீர் செய்து தரும்படி கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags: லால்பேட்டை

Share this