Breaking News

அபுதாபியில் சபரி மாலாவுக்கு அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு

நிர்வாகி
0
ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்த சமூக ஆசிரியை சபரிமாலா அவர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி, அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் வைத்து நேற்று (08-11-2021)மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர், கீழை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் தலைமை வகித்தார்.
அய்மான் சங்க மார்க்கத்துறைச் செயலாளர் மெளலவி எஸ்.எம்.பி. ஹுஸைன் மக்கி மஹ்ளரி நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
அய்மான் சங்கப் பொருளாளர் மௌலவி முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
அய்மான் சங்க நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீது அய்மான் சங்கப் பணிகளைப் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.
பட்டிமன்ற பேச்சாளர், ஆசிரியர், மற்றும் பெண் விடுதலை கட்சியின் நிறுவனர் சமூக ஆசிரியை சகோதரி சபரிமாலா அண்ணல் நபி நாயகம் (ஸல்) காட்டித்தந்த பெண்ணியம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
"ஆலிவ் குரூப் ஆஃப் ஸ்கூல்" நிறுவனர் பொள்ளாச்சி செய்யது முகம்மது வாழ்த்துரை நிகழ்த்தினார்.
இறுதியாக அய்மான் சங்கத் துணைப் பொருளாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்சா நன்றி கூறினார். நிகழ்ச்சி துஆவுடன் நிறைவு பெற்றது
இந்த நிகழ்ச்சியில், இந்திய முஸ்லிம் பேரவை , அபுதாபி ஜமாத்துல் உலமா சபை, அபுதாபி மௌலிது கமிட்டி, அபுதாபி லால்பேட்டை ஜமாத் , காயிதே மில்லத் பேரவை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் ஒய். எம். அப்துல்லாஹ், பைத்துல் மால் பொது செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன், நிர்வாக செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஏ.ஹெச்.சயீத் முஹம்மது பாசில்,அய்மான் சங்க மக்கள் தொடர்புச் செயலாளர் தேவிப்பட்டிணம் ஹாஜா முபினுத்தீன்,உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags: உலக செய்திகள்

Share this