ஷார்ஜா அரசு பணியாளர்களுக்கு வாரம் 4 நாள் மட்டும் வேலை
நிர்வாகி
0
ஐக்கிய அரபு அமீரகம் முன்னதாக, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை மதியம் வரை வேலை நாட்கள் என அறிவித்திருந்த நிலையில், இப்பொழுது ஷார்ஜாவில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜாவில் அரசு பணியாளர்களுக்கு ஜனவரி 1 2022 முதல், திங்கள் முதல் வியாழன் வரை, காலை 7:30 மணி முதல் மாலை 3.30 மணி வரை வேலை நேரமாக இருக்கும்.
ஷார்ஜாவின் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும், ஆட்சியாளருமான ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமியின் உத்தரவின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Tags: உலக செய்திகள்