Breaking News

லால்பேட்டை மருத்துவ சேவை மையம் புதிய கட்டிட அறிமுக விழா

நிர்வாகி
0
லால்பேட்டை மருத்துவ சேவை மையம் (Lalpet Health Care Center) விரிவாக்கத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய இணைப்பு கட்டிட அறிமுக விழா நிகழ்ச்சி லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹாஜி ஜெ.எம்.அப்துல் ஹமீது அவர்கள் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.
லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை தலைவர் முஹம்மது அன்வர் வரவேற்புரையாற்றினார். லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை நிர்வாகள் உறுப்பினர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் மருத்துவ மனை ஆலோசனைக் குழு தலைவர் முஹதஸிம்பில்லாஹ் மருத்துவ மனையின் செயல்பாடுகளை விவரித்தார்.
அறக்கட்டளை உறுப்பினர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி மருத்துவ அறக்கட்டளையின் துவக்கம் முதல் மருத்துவ மனையின் தற்கால செயல்பாடுகள் வரை குறித்து அறிமுக உரையாற்றினார்.
லால்பேட்டை மற்றும் சுற்றுவட்டார மக்களின் 24 மணி நேர மருத்துவ தேவைக்கு,தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் லால்பேட்டை மருத்துவ மையம் புதிய வளர்ச்சியையும்,நோயாளிகளுக்கு அனைத்து வசதிகளுடன் ஒரே மருத்துவமனையில் கிடைக்கும் வகையில் முன்னேற்றப் பாதையில் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள்,வெளிநாடு வாழ் லால்பேட்டை பிரதிநிதிகள், முஸ்லிம் பட்டதாரிகள் கல்வி சங்கம், மற்றும் தமுமுக பிரதிநிதிகள் தங்களின் மேலான ஆலோசனைகளை மருத்துவமனையின் வளர்ச்சிக்கு வழங்கினார்கள்.
மருத்துவ அறக்கட்டளை பொருளாளர் நியமத்துல்லாஹ் நன்றி கூற துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.

Tags: லால்பேட்டை

Share this