Breaking News

உங்கள் வாக்குறுதி என்னைக் கொன்று விட்டது...!

நிர்வாகி
0




அது ஒரு குளிரான இரவு; அந்த நாட்டின் மன்னன் தனது பயணத்தை முடித்துவிட்டு

தனது அரண்மனைக்குத் திரும்பினார். அரண்மனையின் வயதான வாயிற்காப்போன்  மெல்லிய ஆடைகளுடன் குளிரில் நிற்பதைக் கண்டார்.  எனவே மன்னன் அவரை அணுகி அவரிடம் கேட்டார்: உங்களுக்கு குளிராக இல்லையா?


காவலர் பதிலளித்தார்: ஆம், எனக்கு குளிராக இருக்கிறது, ஆனால் என்னிடம் குளிர் தாங்கும் ஆடைகள் இல்லை, குளிர் தாங்க முடியவில்லை.


மன்னன் அவரை நோக்கி: நான் இப்போது அரண்மனைக்குள் சென்று, என் வேலைக்காரர் ஒருவரிடம் உனக்குக் குளிர்கால ஆடைகளைக் கொண்டுதரச் சொல்கிறேன், என்றார்.


மன்னனின் வாக்குறுதியால் காவலர் மகிழ்ச்சியடைந்தார், ஆனால் அரசன் தனது அரண்மனைக்குள் நுழைந்த பின், தனது வாக்குறுதியை மறந்துவிட்டார்.


இந்நிலையில் மறுநாள் காலையில், வயதான அந்தக் காவலர் குளிரால் இறந்துவிட்டார்; அவருக்கு அருகில் ஒரு தாள் இருந்தது, அதில் அவர் எழுதி இருந்தார்: 


“அரசே, எனது காவல் பணியின் காரணமாக நான் ஒவ்வொரு இரவும் குளிரைத் தாங்கித்தான் ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்;  தாங்கினேன், ஆனால் குளிர் தாங்கும் ஆடைகள் பற்றிய உங்கள் வாக்குறுதி என் வலிமையைப் பறித்தது. என்னைக் கொன்று விட்டது."


ஆம், மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் நீங்கள் நினைப்பதை விட அவர்களுக்கு அதிக  அர்த்தமுள்ளதாக இருக்கலாம்.. எனவே வாக்குறுதியில் கவனம் செலுத்துங்கள்! ஏனெனில் வாக்குறுதி கவனிக்கப்படாமல் போகும்பொழுது என்ன நேர்ந்தது என்பது உங்களுக்குத் தெரியாது.


அல்லாஹ் கூறுகிறான்:

 وَاَوْفُوْا بِالْعَهْدِ‌ اِنَّ الْعَهْدَ كَانَ مَسْــــٴُـوْلًا‏

 இன்னும் வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும். (17:34)


நயவஞ்சகனின் அடையாளம்     மூன்றாகும்...

1-  பேசினால் பொய் பேசுவான்

2- வாக்களித்தால் முரண்படுவான்

3- நம்பினால் மோசடி செய்வான். (நபிமொழி: புகாரி, முஸ்லிம்)

நன்றி..

ஜே.எஸ்.ரிஃபாயீ 


Tags: இஸ்லாம்

Share this