Breaking News

அமீரகத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை

நிர்வாகி
0
துபாய்: ஜனவரி 1 2022-ம் ஆண்டு முதல் வெள்ளிக்கிழமை மதியம் முதல் சனி மற்றும் ஞாயிறு புதிய வார விடுமுறை இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் இன்று அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம், உலகளாவிய ஐந்து நாட்களுக்கு குறைவாக பணிபுரியும் உலகின் முதல் நாடாக அமீரகம் மாறுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அதிகாரிகள் கூறுவதாவது, அமீரகத்தின் வார வேலை நேரங்கள் திங்கட்கிழமை தொடங்கி, வெள்ளிக்கிழமை பிற்பகல் முடிவடையும். தினசரி வேலை நேரம் காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை இருக்கும். வெள்ளிக்கிழமை 4.30 மணி நேரமாக இருக்கும். நீண்ட வார விடுமுறையானது உற்பத்தித்திறனை அதிகரிப்பதையும், வேலை நேர வாழ்க்கையை சமநிலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆண்டுமுழுவதும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நேரம் மதியம் 1.15 மணிக்குப் பிறகு நடைபெறும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொருளாதாரம், சமூகம், குடும்ப உறவுகள் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்வு அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. விரிவான செயல்முறை மற்றும் சாத்தியக்கூறுகள் ஆய்வுகளை தொடர்ந்து அரசாங்க மனித வளங்களுக்கான கூட்டாட்சி ஆணையம் புதிய வேலை நேரத்தை முன்மொழிந்து உள்ளது.

Tags: உலக செய்திகள்

Share this