லால்பேட்டை நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
லால்பேட்டை பேரூர் திமுகழக செயல்வீரர் கூட்டம் 25.12.2021 சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் தேர்தல் அலுவலகத்தில் பேரூர் கழக அவைத் தலைவர் S.அஹ்ஷன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேரூர் கழக செயலாளர்.ஹாஜி.Mk.ஹாஜாமுகைத்தீன் வரவேற்றார்
கூட்டத்தில் சிறப்பு அழைப்பார்கள்
காட்டுமன்னார்கோயில் ஒன்றிய கழக செயலாளர் M.முத்துசாமி. பொறுளாளர். MR.சண்முகம். தலைமை கழக பேச்சாளர் தானூர் சிவக்கொழுந்து குமராட்சி ஒன்றிய கழக செயலாளர்கள். M.சோழன். கோவிந்தசாமி காட்டுமன்னார்கோயில் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் செல்வன்.மற்றும் லால்பேட்டை பேரூர் கழக நிர்வாகிகள் கழக மூத்தமுன்னோடிகள் கலந்து கொண்டனர்
தீர்மானங்கள்
1 .பேரூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடுவது
2 . உறுப்பினர்கள் சேர்த்தல்
3 . .15 வார்டுகளிலும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் அமைத்தல்
4. லால்பேட்டை பேரூராட்சி பகுதியில் அரசு மருத்துவமனை கொண்டு வர வேண்டும்
5. ஜாகீர் உசேன் நகர்
லால்பேட்டை இணைப்பு பாலம் கார் வாகனம் செல்ல புதிய பாலம் அமைக்க வேண்டும்
6 . மழைகாலங்களில் வெற்றிலை கொடிக்காலில் பணிபுரியும் நலிவுற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிதியுதவி மற்றும் வெற்றிலை விவசாய நலவாரியம் அமைக்கவும்
7.சேத்தியதோப்பு முதல் மயிலாடுதுறை வறை அரசு பேருந்து விட வேண்டும்
மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றினர்.
Tags: லால்பேட்டை