துபாய் வாழ் நண்பர்களுக்கு....
வரும் ஜனவரி 2022 முதல் வார இறுதி விடுமுறைக்கான நாள்களை (அரசு அலுவலகங்கள்) சனி & ஞாயிறு என்றும், இதுவரையிலும் முழு விடுமுறை நாளாக இருந்த வெள்ளி அரை விடுமுறை நாள் என்றும் துபை அரசு அறிவித்திருந்தது அனைவரும் அறிந்த செய்தி.
இதில், வாரத்தில் ஒரு நாள் கட்டணமில்லாத CAR PARKING வெள்ளிக்கிழமை என்று இருந்துவந்தது. புதிய வார இறுதி நாள்கள் அறிவிக்கப்பட்ட பின் எந்த நாளில் கட்டணமில்லாத CAR PARKING என்று தெரியாமல் இருந்தது. மறு அறிவிப்பு வெளியாகும் வரையில், வெள்ளிக்கிழமையே வழக்கம்போல கட்டணமில்லாத நாளாகத் தொடரும் என்று அரசு அறிவித்திருக்கிறது.
அதேபோல, மிதக்கும் பாலம் (Floating Bridge) இதுவரையிலும் வியாழன் இரவு 10 மணி முதல் சனி காலை 6 மணி வரையிலும் பொதுப் போக்குவரத்துக்கு அடைக்கப்பட்டிருக்கும். அதுபோது சுங்கம் செலுத்தாமல் மக்தூம் சுங்க மேம்பாலத்தில் பயணிக்க முடியும். இனிமேல் அது (பிப்ரவரி 2 முதல்) சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரையில் என மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
மெட்ரோ ரயில் சேவை: திங்கள் முதல் வியாழன் வரையிலும் காலை 5 மணிக்குத் தொடங்கி (மறுதினம்) 1:15 am வரையிலும், வெள்ளி & சனிக்கிழமைகளில் காலை 5 மணி தொடங்கி (மறுதினம்) 2:15 am வரையிலும் சேவை இருக்கும். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி (மறுதினம்) 1:15 am வரையிலும் சேவை இருக்கும் என ஆர்டிஏ அறிவித்திருக்கிறது.
நன்றி. ரஃபிக் சுலைமான்
Tags: உலக செய்திகள்
தகவலுக்கு நன்றி லால்பேட்டை எக்ஸ்பிரஸ்
பதிலளிநீக்கு