ஆன்மீக மனம் பரப்பும் லால்பேட்டை பெருநகருக்கு வருகை தரும் ஓதுரப் பிள்ளைகளே வருக!
ஆன்மீக மனம் பரப்பும்
லால்பேட்டை பெருநகருக்கு
வருகை தரும் ஓதுரப் பிள்ளைகளே
வருக!
தீன் நெறி போதிக்கும்
லால்பேட்டை திருநகருக்கு
வருகை தரும் தீனின் தீரர்களே வருக!
சலசலக்கும் வீராணம் ஏரியும்
சாய்ந்தோடும் வெள்ளியங்கால் ஓடையும்
பளபளக்கும் வெற்றிலை கொடிகாலும் போற்றி பாராட்டும்
வாஞ்சைமிகு மன்பவுல் அன்வாருக்கு
வருகை தரும் வள்ளல் நபியின்
வாரிசுகளே வருக!
அன்றொரு நாள் காஃபாவைக்
காப்பாற்றிட அதன் உரிமையாளன்
அபாபீல் பறவைகளை அனுப்பி வைத்தான்;
இன்றோ இஸ்லாம் என்னும் தூய நெறியை பாதுகாத்திட "மன்பயீ" என்னும் அறிஞர்களை பாரெங்கும்
அனுப்பி வைக்கும் மகத்தான
மன்பவுல் அன்வாரின் செல்லப்பிள்ளைகளே வருக!
மன்பயீ பேரவையின் ஒன்றுகூடலுக்கும்
ஷைகுல் ஹதீஸ் வாப்பாவின் நினைவேந்தலுக்கும்
தீனின் கோட்டைக்கு வருகை தரும்
முத்துக்களே வருக!
லால்பேட்டையையும்
மன்பவுல் அன்வாரையும்
தமது இரு கண்களாக பாவிக்கும்
சமுதாயத்தின் சொத்துக்களே வருக!
"மில்லத்"களின் (காயிதே மில்லத், ஷைகுல் மில்லத், ஃகைருல் மில்லத், ஷம்சுல் மில்லத், சிராஜுல் மில்லத், மஹபூபே மில்லத், முஜாஹிதே மில்லத், ஷம்சீரே மில்லத், முனீருல் மில்லத்) கோட்டையாம்
லால்பேட்டைக்கு வருகை தரும்
வாய்மையாளர்களே வருக!
வெள்ளுடை வேந்தர்களே வருக!
வெற்றி வீரர்களே வருக!
அன்புடன்...
லால்பேட்டை சல்மான்
Tags: லால்பேட்டை