நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 73 வது குடியரசு தின விழா..!
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்தியாவின் 73 வது குடியரசு தின விழா கட்சி அலுவலகம் அருகில் நகர தலைவர் எஸ்.எம். அப்துல் வாஜிது தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம். அனீசுர் ரஹ்மான், நகர செயலாளர் எம்.ஹெச். முஹம்மது ஆசிஃப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர துணைத் தலைவர் மவ்லவி ஏ. அமீனுல் ஹுசைன் மன்பஈ இறைவசனங்களை ஓதினார். நகர பொருளாளர் ஏ. முஹம்மது தைய்யூப் முஹிப்பி வரவேற்றுப் பேசினார்.
மண்டல பொறுப்பாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி கொடியேற்றி வைத்து, குடியரசு தின உரையாற்றினார். ஆசிரியர் எம். ஜமாலுத்தீன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வை தலைமை நிலைய பேச்சாளர் யூ. சல்மான் பாரிஸ் தொகுத்து வழங்கினார்.
நகர கௌரவ ஆலோசகர் எம்.ஹெச். முஹிப்புல்லாஹ், துணைத் தலைவர்கள் எஸ். ஹாமீது, கே.எஸ். சபியுல்லாஹ், மவ்லவி எம். முஹம்மது அய்யூப் மன்பஈ, நகர துணைச் செயலாளர்கள் எம். எஸ். சித்தீக், எஸ்.ஏ. அபுஸ்ஸுஹுத், டி.ஏ. அபுஸ்ஸுஹுத், மாவட்ட பிரதிநிதிகள் ஏ. உபைதுர் ரஹ்மான், எம். முபாரக், ஏ.கே. அஸ்கர், மாணவரணி மாநில பொருளாளர் ஏ.எஸ். அஹ்மத், இளைஞரணி செயலாளர் எம்.ஏ. ஹிதாயத்துல்லாஹ், துணைத் தலைவர் மவ்லவி தவ்ஃபீக் மன்பஈ, மாணவரணி தலைவர் அஜார், செயலாளர் முஸாஹிர், பொருளாளர் நியாஜ், துணைத் தலைவர் நிஜாம், எஸ். பக்கீர் முஹம்மது, வி.ஜே. குத்புத்தீன், எஸ்.ஏ. அப்துர் ரஷீத், மவ்லவி இஸ்மத்துல்லாஹ், எஸ்.எம். மஃரூப், ஏ.எஸ். முஹம்மது இஸ்மாயில், ஆஷிக், மவ்லவி அபுல் ஃபைசல், லுத்துபுல்லாஹ், ஜே.ஹெச். நகர் பிரைமரி செயலாளர் மவ்லவி இர்ஃபானுல்லாஹ் மன்பஈ உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நகர துணைச் செயலாளர் எம். அமானுல்லாஹ் நன்றி கூறினார். நகர இளைஞரணி தலைவர் ஹாமீம் ஃபைஜி துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
Tags: லால்பேட்டை