Breaking News

புதுச்சேரியில் முஸ்லிம் தொழிலதிபர் மீது வடமாநில பாணியில் கும்பல் தாக்குதல் : பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

நிர்வாகி
0

 



புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்ததிலிருந்து பல்வேறு குற்ற சம்பவங்களும் முஸ்லிம்கள் தாக்கப்படும் சம்பவங்களும் முஸ்லிம் வாகனங்களின் மீது பெட்ரோல் குண்டு வீசக் கூடிய சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 


நேற்றைய தினம் வடமாநிலங்களில் நடைபெறக்கூடிய கும்பல் தாக்குதல் (lynching) சம்பவங்களைப் போன்று யூசுஃப் என்ற தொழிலதிபர் வாகனத்தில் செல்லும்போது சில சமூக விரோதிகள் அவரை விரட்டிச் சென்று அவரது வாகனத்தை தாக்கி அவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.


இது புதுச்சேரியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ஆளக்கூடிய N.R. அரசு உடனடியாக

தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்


A. பயாஸ் அஹமது மன்பஈ 

கடலூர் & புதுச்சேரி மாவட்ட தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Tags: செய்திகள்

Share this