Breaking News

லால்பேட்டை நகர இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்குழு நடைபெற்றது.

நிர்வாகி
0


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லால்பேட்டை நகர பொதுக்குழு கூட்டம்; நகர நிர்வாகிகள் தேர்வு !


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லால்பேட்டை நகர பொதுக்குழு கூட்டம் 19/01/2022 புதன்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு லால்பேட்டை புதுபஜாரில் உள்ள மைனர் தமீம் மைதானத்தில், கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஏ. முஹம்மது ஜெகரிய்யா தலைமையில், மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.எம். அனீசுர் ரஹ்மான், மவ்லவி ஏ. முஹம்மது ஹாரிஸ் மன்பஈ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


மவ்லவி தவ்ஃபீக் மன்பஈ இறைவசனங்களை ஓதி கூட்டத்தை துவக்கி வைக்க, நகர தலைவர் எஸ்.எம். அப்துல் வாஜிது வரவேற்றுப் பேசினார்.


கட்சியின் செயல்பாடுகள் குறித்து நகர பொருளாளர் ஏ. முஹம்மது தைய்யூப் முஹிப்பி அறிக்கை சமர்ப்பித்தார். மவ்லவி எம். முஹம்மது அய்யூப் மன்பஈ கருத்துரை வழங்கினார். தலைமை நிலைய பேச்சாளர் யூ. சல்மான் பாரிஸ் தீர்மானங்களை முன்மொழிந்து பேச, நகர கௌரவ ஆலோசகர் கவிஞர் ஏ.எம். முஹிப்புல்லாஹ் வழிமொழிந்து உரையாற்றினார்.


சிறப்பு அழைப்பாளராக மேலிட பொறுப்பாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி பங்கேற்று நகர நிர்வாகிகளை அறிவித்து சிறப்புரையாற்றினார்.


கீழ்காணும் நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

நகர கவுரவ ஆலோசகர்கள்:

கவிஞர் ஹாஜி ஏ.எம்.முஹிப்புல்லாஹ், ஹாஜி எம்.ஹெச்.முஹிப்புல்லாஹ், லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி ஹாஜி வி.ஏ.அப்துர் ரஹ்மான், 

ஜனாப் ஏ.ஹெச்.அப்துல் ரவூப். நகர தலைவர்: ஹாஜி எஸ்.எம்.அப்துல் வாஜிது


நகர செயலாளர்: ஜனாப் எம்.ஹெச் முஹம்மது ஆசிப் 


நகர பொருளாளர்: ஹாஜி ஏ.முஹம்மது தைய்யூப் முஹிப்பி 


நகர துணை தலைவர்கள்: 

ஹாஜி எஸ்.எம்.ஹாமீது, ஹாஜி கே.எஸ்.சபியுல்லா, ஹாஜி மவ்லவி ஏ.அமீனுல் ஹுசைன் மன்பஈ, மவ்லவி எம்.முஹம்மது அய்யூப், ஹாஜி எம்.ஹெச்.முஹம்மது பஷீர்.


நகர துணை செயலாளர்கள்:

ஹாஜி எம் .அமானுல்லா, ஹாஜி எம்.எஸ்.முஹம்மது சித்தீக், 

ஜனாப் டி.ஏ.அபுசுஹுது, 

ஹாஜி எஸ்.ஏ.அபுசுஹுது, 

ஜனாப் கே.ஏ.நஜியுல்லா.

முஸ்லிம் யூத் லீக் (MYL)  நிர்வாகிகள்:

தலைவர்: மவ்லவி முஹம்மது ஹாமீம் 

செயலாளர்: 

ஜனாப் எம்.ஏ.ஹிதாயத்துல்லா

பொருளாளர்: ஏ.ஆர்.சிராஜுதீன் 

துணை தலைவர்: மவ்லவி தவ்பீக் மன்பஈ


முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) நிர்வாகிகள்:

தலைவர்: ஜனாப் ஏ.அசாருதீன் 

துணை தலைவர்கள்: பி.முஹம்மது அஸ்பர், 

நிஜாம்

செயலாளர்: ஜனாப் முஸாஹிர் 

துணை செயலாளர்: 

எம்.ஹெச்.அஸ்பர் 

பொருளாளர்: முஹம்மது நியாஜ் 


தகவல் தொழில்நுட்ப அணி IT Wing 

ஜனாப் ஹெச்.எஸ்.முஹம்மது ஹாசிம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


மாவட்ட பிரதிநிதிகள்: 

ஹாஜி ஏ.உபைதுர் ரஹ்மான்

ஹாஜி எம்.ஜெ.மஷூது அஹ்மது

ஹாஜி எஸ்.எம்.அனீசுர் ரஹ்மான்

மவ்லவி ஜியாவுதீன் பாக்கவி 

ஜனாப் ஹெச்.எம்.முஹம்மது முபாரக் 

ஜனாப் ஏ.கே.முஹம்மது அஸ்கர் 

எம்.ஹெச்.முஹம்மது ஹசன் 

முஹம்மது ஹாஜா

M.I.இம்தாதுல்லாஹ்


நகர துணைச் செயலாளர்

எம். அமானுல்லாஹ் நன்றியுரைக்கு பின், மவ்லவி ஏ. அமீனுல் ஹுசைன் மன்பஈ துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட - நகர நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.


மிகச் சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.


தீர்மானம் 1) சமீப காலத்தில் நம்மை விட்டு மறைந்து விட்ட சமுதாய பிரமுகர்கள், ஆலிம் பெருந்தகைகள் உள்ளிட்டோரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் மறுஉலக நல்வாழ்விற்கு இக்கூட்டம் துஆச் செய்கிறது.


தீர்மானம் 2) லால்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் துணை மின்நிலையம் அமைத்து தருமாறு தமிழ்நாடு மின்சார வாரியத்தை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம் 3) முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட லால்பேட்டை நகரில் நாளுக்கு நாள் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு சுகாதார சீர்கேட்டை சரிசெய்திடும் வகையில் போர்க்கால அடிப்படையில் செயல்பட பேரூராட்சி நிர்வாகத்தை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம் 4) திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி வீராணம் ஏரியை சுற்றுலாத் தளமாக அறிவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்வதுடன், இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க மாவட்டத்தின் அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


தீர்மானம் 5) தமிழ்நாடு அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் 2020 - 2021 அரவைப் பருவத்திற்கு கரும்பு ஊக்கத் தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் கரங்களால் பெற்ற, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நகர பிரமுகர் எம். ஹெச். முஹிப்புல்லாஹ் அவர்களை, தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களோடு இணைந்து இக்கூட்டம் பாராட்டி வாழ்த்துவதுடன், மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம் 6) இப்பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நகர நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோரை இக்கூட்டம் வாழ்த்துகிறது.


தீர்மானம் 7) நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் லால்பேட்டையில் உள்ள கூட்டணி கட்சிகளோடு கலந்தாலோசித்து முடிவெடுத்து தேர்தலை சந்திக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.


தீர்மானம் 8) மார்ச் மாத துவக்கத்தில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவை கட்சியின் முன்னணி தலைவர்களை கொண்டு சிறப்பாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.




Tags: லால்பேட்டை

Share this