லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம்
நிர்வாகி
0
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையும் தற்போது கொரோனா ஒமைக்ரான் நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது இந்நிலையில் 15 வயது முதல் 18 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசு மேற்கொண்டுள்ளது அதன் அடிப்படையில் இன்று கடலூர் மாவட்டம் லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவன் தலைமையில் வட்டாச்சியார் ராமதாஸ். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பத்ஹுத்தீன், வட்டார மருத்துவர் மங்கையர் கரசி ஆகியோர் முன்னிலையில் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் இதில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முன்னால் மாணவர் சங்க நிர்வாகிகள் ஆசிரியர்கள் பேரூராட்ச்சி அதிகாரிகள் மருத்துவத்துறை அதிகாரிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை