Breaking News

அறிவோம் அகிலத்தின் அரிதான அதிசயங்கள்! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )

நிர்வாகி
0


நம்மை சுற்றி பவனி வரும் பல்வேறு உயிரினங்கள், பறவைகள் மற்றும் உலகின் அதிசயங்களை பற்றிய குழப்பமான செய்திகளை பற்றிய உண்மை நிலை குறித்து இந்த கட்டுரை எழுதுவதுமூலம் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் பயன்படும் என்ற நோக்கத்துடன் முயன்றுள்ளேன். 1) அகிலத்தில் இன்றைய 775 கோடி மக்கள் தான் அதிகமானோர் என்று எண்ணலாம். உலகில் 50,000 ஆண்டுகளாக மக்கள் பல்வேறு நாகரீகங்களில் வாழ்ந்ததாக கூறப் படுகிறது. காலப்போக்கில் இயற்கை சீற்றத்தால் கொலம்பியா, மெக்சிகோ, பொலிவியா மற்றும் குவாட்ரமாலா நாடுகளில் வாழ்ந்த மாயா நாகரிகமும், கம்போடியா ஆங்கர் அடங்கிய கெமர்நாகரிகமும், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளடக்கிய இண்டஸ் நதியோரம் அமைந்திருந்த ஹரப்பான் நாகரிகமும், ஈஸ்டர் தீவினை ஒட்டியுள்ள பாலினீசியன் நாகரீகம், துருக்கியினை மையமாக வைத்த கடால்ஹோயுக் நாகரீகம், அமெரிக்கா இலினோஸ் சுற்றியிருந்த மிஸிஸிப்பி நாகரீகம், லெமுரியா இந்திய பெருங்கடலினை மையமாக கொண்ட நாகரீகம் காலப்போக்கில் அழிந்து விட்டன. அவைகளில் எவ்வளவு மக்கள் வாழ்ந்தார்கள் என்று இன்னமும் கணக்கிடப் படவில்லை. சென்சஸ் என்ற மக்களின் கணக்கெடுப்பு பழமையான எகிப்து, ரோமன் காலங்களில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தான் செயல்பட்டது. அமெரிக்க வாஷிங்டன் நகரில் உள்ள மக்கள் கணக்கெடுப்பு குறிப்பின்படி மக்கள் தொகை கடந்த 10000 ஆண்டுகளில் உள்ளதுதான் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பு உள்ள மக்கள் தொகைப்பற்றிய குறிப்பேடு எதுவுமில்லை ஆகவே தற்போதைய 770 கோடி மக்கள் தொகைதான் பெரியது என்று ஆணித்தரமாக சொல்லமுடியாது.

          2) உலகிலேயே அதிக உயரம் கொண்ட மலை எது என்று பாடப்புத்தகத்தில், மற்றும் பூலோக வரை படத்தில் இமயமலை என்று கூறுவர். ஆனால் அது உண்மையில்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா?

சாதாரணமாக மலையின் உயரத்தினை அடிபாகத்திலிருந்துதான் கணக்கிடுவர். அல்லது கிரகங்களிலிருந்து கணக்கிடுவர். ஆனால் இரண்டிலும் அது தவறானது. ஆனால் நிச்சயமாக தரையிலிருந்து இமயமலை 8850 மீட்டர் கொண்டதாகவும் உயரமாகவும் உள்ளது. உண்மையில் அமெரிக்காவின் ஹவாயிலுள்ள ‘மவுண்ட் கியா’ தான் மிகவும் உயரமாக 10203 மீட்டர் கொண்டதாகும். அதில் 4205 மீட்டர் மலை மட்டும் தான் கடலுக்கு மேலே இருக்கின்றது. மீதமுள்ள உயரம் கடலுக்கு அடியிலே இருக்கின்றது. அதேபோலவே  நாமெல்லாம் ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள சஹாரா பாலைவனம் தான் உலகிலேயே பெரியது அது 8.6 மில்லியன் கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது என்று சொல்வோம். அது அமெரிக்காவின் நிலப் பரப்பிற்கு சமமானது என்றும் சொல்வோம். ஆனால்  ஆர்க்டிக் என்ற உலகின் வட பாகமும் பனிப்பாறை சூழ்ந்ததுமானதும் கிட்டத்தட்ட 1.40 கோடி சுற்றளவு கொண்டதும், பூமியின் தெற்குப் பாகத்தில் உள்ள அண்டார்டிகா 1.42 கோடி நிலப் பரப்பு  கொண்டதும், ஆஸ்திரேலியா கண்டத்திற்கு இணையாக இருப்பதுமே பெரிய பாலை வனமாகவும், மிகக் குறைந்த மழை பெய்யும் இடமாக கருதப் படுகிறது.

          3) 1800 ஆண்டிலிருந்து நமது மூளையினை 10 சதவீத பயனுள்ளதாகத்தான் நினைத்துள்ளோம். ஆனால் அது உண்மையில்லை. அந்த 10 சதவீத பகுதியும் நியூரான் என்ற அமைப்பினை கொண்டதாகும். அது மின்சார உற்பத்தி கொண்டதாகும். அதன் மூலம் மூளையின் எந்த பகுதி பயன் பாட்டிற்கு உள்ளது என்பதினை கண்டறிவதிக்காகும். உதாரணத்திற்கு கை தட்டுதல், கனவு காணுதல், விடைகள் கண்டு பிடித்தல் போன்றவையாகும். உண்மையில் கிளையில் செல்ஸ்(glial cells) நரம்புகளை இயக்கும் தகுதிகளை கொண்டதாகும். இன்று விஞ்ஞானிகள் மூளையின் பல்வேறு செயல்பாடுகளான சுவாசிக்கின்றது, உடலை சரியான தட்ப வெப்ப நிலைக்கு வைப்பது, நடப்பது, பல்வேறு விஷயங்களை ஞாபகத்தில் வைப்பது, படங்களை நினைவில் வைப்பது போன்றவற்றை செய்கின்றது என்றும் அறிகின்றனர். ஆனால் மனிதன் மூளையின் எல்லா பகுதியினையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில்லை. அவ்வாறு செய்தால் மனிதன் ஞாபக சக்தியினை இழந்து வலிப்பு தாக்கங்கள் ஏற்படும். ஆகவே தான் அறிவாளிகள் மூளையின் அனைத்து பகுதியினையும் பயன்படுத்துவதில்லை. நியூரான் என்ற சாம்பல் நிற பகுதி உண்மையில் சாம்பல் நிறத்திலில்லை, மாறாக சிகப்பு நிறத்திலும், மூளையின் மற்ற பகுதி சாம்பல் நிறத்திலும் தான் உள்ளது.

          4) நாம் பனி மழை கட்டிகளை பார்த்திருக்கிறோம். அவைகள் பார்க்கும் போதும், தரையில் விழும்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று தான் நினைக்கின்றோம். அதனை ஆராய அமரிக்காவினைச் சார்ந்த போட்டோ கிராபர் வில்சன் பென்டலே 1885ம் ஆண்டு  டெலஸ்க்கோப் பொருத்தி உயரமான இடத்தில் இருந்து சுமார் 5000 பனி மழைக் கட்டிகளை  ஆராய்ந்துள்ளார். அப்போது தான் வானத்தில் இருந்து விழும் பனிக் கட்டிகள் பல உருவத்துடன் இருப்பது. அதனைத் தொடர்ந்து தலை முடி, இரட்டையர் ஆகியோரை ஆராய்ந்தபோது ஒருவருடைய தலையில் உள்ள முடிகள் ஒவ்வொன்றும் பல்வேறு விதமானதும், இரட்டையர் என்று சொல்லும் இருவரிடையே பல்வேறு வேற்றுமை இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

          5) உருளைக் கிழங்கு தோலை சீவி சமைப்பதினை பார்த்திருக்கின்றோம். ஆனால் அப்படி சமைத்த உருளைக்கிழங்கின் சத்து குழம்பில் கரைந்து விடுகின்றதாம். தோலில் விட்டமின் என்ற புரத சத்து உள்ளதாம். அந்த உருளைக்கிழங்கு தோல் தான் உருளைக் கிழங்கின் சத்து வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுதாம். வெளிநாட்டவர் அதனை நீராவியில் அவித்து தோலுடன் சாப்பிடுவதினை பார்த்து நமக்கு எல்லாம் சிரிப்பு வரும். அதேபோன்று தான் ஆப்பிளை தோல் சீவி சாப்பிடுவோம். ஆனால் அதனில் சத்தில்லை. சென்னையில் விற்கும் ஆப்பிளில் மெழுகு தடவி இருப்பதால் அவ்வாறு சில சமயங்களில் செய்கிறோம். அப்படி இருந்தால் கத்தியினால் தோலின் மேலே இருக்கும் மெழுகினை சுரண்டி விட்டு தோலுடன் சாப்பிடலாம். எனது தந்தை மலேசியா பெட்டாலிங் ஜெயாவின் மொத்த மளிகைக்கடை வைத்திருந்தார்கள். நான் அங்கு 1979ம் ஆண்டு சென்றபோது எனக்கு ஒரு வாழைப் பழத்தினை கொடுத்துவிட்டு அவர்கள் ஒரு பழம் சாப்பிட்டார்கள். நான் பழத்தோலை எடுத்துவிட்டு சாப்பிட்டேன். ஆனால் என் தந்தை தோலுடன் சாப்பிட்டால் செரிமானமாகும் என்று தோலுடன் சாப்பிட்டார்கள்..  அதனால் நம் உணவு செரிமானமாகும், உடல் கொழுப்பு சத்து குறையும், சில விஞ்ஞானிகள் சில சமயத்தில் இதய நோய் வராமலும் காப்பற்றும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

          6) நாமெல்லாம் நினைத்துள்ளோம் வெளியில் செல்லும்போது உடலை பாதுகாக்க கம்பளி துணிகளை அணிந்து சென்றால் சளி பிடிக்காது என்று. உண்மையில் சளியானது குளிரால் வருவதல்ல மாறாக கிருமிகளால் வருவது என்பது தான் உண்மை. வைரஸ் கிருமிகள் கூட்டு வாழ்க்கை வாழக் கூடியது. உடலில் உள்ள செல்களுடன் கலந்து விரிவடைகிறது. ஆனால் குளிர் காலங்களில் ஏன் கிருமிகள் பரவுகிறது என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் நீங்கள் குளிர் காலங்களில் வீட்டுக்குள்ளேதான் இருக்கின்ரீர்கள். அதனால் அடுத்தவர்களுடைய கிருமிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புண்டு. குளிர் காலங்களில் வெளிப்புற பழக்க வழக்கங்களை மற்றும் உடற்பயிற்சிகளை செய்யாது இருப்பதினால் கிருமிகள் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுவதினால் உங்களுக்கு சளி பிடிக்கின்றது.

          7) நமக்கெல்லாம் தெரியும் காய் கறிகள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்றும், அதுவும் காரட் சாப்பிட்டால் அது வைட்டமின் ஏ சத்துள்ளது, நோய்களை எதிர்க்கும் சக்தியும், பார்வை சக்தியும் கூடுதலாக இருக்கும் என்றும். ஆனால் காரட் சாப்பிட்டால் இரவில் நன்றாக தெரியும் என்ற ஒரு நம்பிக்கை ஆங்கிலேயரிடம் இருந்தது. இது உண்மையா என்று ஆஸ்திரேலியா நிபுணர் டாக்டர் அன்றோ ரோச்போர்ட ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சிக்காக  பத்து நாட்களுக்கு 15 கிலோ காரட் சாப்பிட்டார். பின்பு லைட் வெளிச்சத்தினை மங்கலாக்கி பார்த்தார். ஆனால் ஒளி மங்கியதாகவே இருந்ததாம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இங்கிலாந்து ராயல் விமானப் படையின் விமானங்கள் அதிக அளவில் ஜெர்மன் விமானப் படையால் தாக்குதல் உண்டானது. அதனை கண்டு அதிர்ந்த இங்கிலாந்து விமானப் படையினரிடையே ஒரு வதந்தி பரப்பினர். காரட் அதிக அளவில் சாப்பிட்டால் கண் பார்வை இரவில் பளிச்சென்று இருக்கும் அதன் மூலம் எதிரி விமானங்களை கண்டு வீழ்த்தலாம் என்று. ஆகவே  வீரர்களுக்கு உணவுடன் காரட் அதிக அளவில் கொடுக்கப் பட்டது. என்ன ஆச்சரியம் இங்கிலாந்து வீரர்கள் ஜெர்மன் விமானங்களை இரவில் கண்டறிந்து சுட்டு வீழ்த்தினர். ஆகவே சிறியளவு காரட் எவ்வாறெல்லாம் இங்கிலாந்து வீரர்களுக்கு பெரும் உதவி செய்தது ஆனால் அது வதந்தியே என்று பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டது டாக்டர் அன்றோ ரோச்போர்ட் மூலம் வெளியானது.         

          8) நீங்கள் கார்ட்டூன் படம் பார்க்கும் போது அவ்வளவு பெரிய யானை அருகில் எலி வந்தால் துள்ளி குதித்து ஓடுவதினை. சிலர் சொல்வார்கள் எலியானது யானையின் தும்பிக்கையில் ஏறி அதற்கு தொந்தரவு செய்யும் என்று. அப்படி என்றால் யானை மற்ற சிறிய மிருகங்களை எல்லாம் பார்த்து மிரளும். ஆனால் யானை அதுபோன்ற சிறிய மிருகங்களை தனது தும்பிக்கையின் பிளிறும் சத்தத்தின் மூலமே விரட்டிவிடும். யானை சிங்கங்கள் போன்ற  பெரிய மிருகங்கள் வரும்போது அதனை தும்பிக்கையால் மற்றும் தந்தத்தால் குத்தி விரட்டும் திறன் கொண்டதாம். உண்மையில் யானைக்கு குறைந்த தூரத்தில் உள்ள பொருட்களை மட்டுமே பார்க்க முடியுமாம்.

யானையின் காலடியில் எலி படும்போது அதனை பார்க்கும் வரை பயப்படாதாம். பார்த்து விட்டால் ஓய்வு கொண்டு விடுமாம். அதற்காக ஒரு சோதனை அமெரிக்க தொலைக் காட்சியில் நடத்தப் பட்டதாம். யானையின் காய்ந்த சாணத்தில் ஒரு எலியினை மறைத்து வைத்தார்களாம். யானையினை அதன் அருகில் வரும்போது எலியினை ஓடவிட்டார்களாம். யானை எலியைத்தாண்டி அமைதியாக சென்றதாம். உண்மையில் யானை பயப்படும் சிறிய சந்து தேனீ தானாம். ஏனென்றால் யானையின் கண் சுற்றி கனமான தோல் இருந்தாலும் தேனீ கடிக்கும் போது வலி தாங்க முடியாதாம். ஆகவே கென்யா நாட்டில் வயல் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வராமல் தடுக்க ஒலி பெருக்கியில் தேனீ இசையினை ஒலி எழுப்புவார்களாம். அதற்கு பெயர் 'apiphobia' என்று அழைக்கப் படும். பல விவசாயிகள் யானைக் கூட்டத்தினை விரட்ட தேன் கூடுகளை வளர்ப்பாகலாம்.

          9) அதேபோன்று தான் வவ்வாலுக்கு கண் தெரியாது என்று சொல்வார்கள். உண்மையில் வவ்வால் கண் பார்வை அதிக சக்தியினை கொண்டது. தனது இரையினை இரவில் தான் தேடும். ஆகவே அதற்கு நாமாக வைத்த பெயர் கண் தெரியாது என்பது. வவ்வாலுக்கு கடலுக்கு அடியில் உள்ள ஒலியினை 'echolocation' என்று அழைக்கப் படும் மூலம் எவ்வாறு ஆராய்ச்சி செய்பவர்கள் கண்டு பிடிக்கின்றார்களோ அதேபோன்று இரவில் தன் அருகில் வரும் பூச்சிகளை எளிதாக கண்டு பிடித்து இரவில் வேட்டையாடுமாம். தனது வேட்டையினை முடித்துவிட்டு தனது புகலிடம் எது என்று துல்லிதமாக அறிந்து திரும்பி வருமாம்.

          நமக்கெல்லாம் பிரான்ஸ் நாட்டின் 18ம் நூற்றாண்டின் பேரரசர் நெப்போலியன் மிகவும் குட்டையானவர் என்று அறிமுகப் படுத்தி உள்ளனர். ஆனால் அது உண்மையில்லை. பிரான்ஸ் அளவுகோல் பிரிட்டிஷ் அளவுகோலை விட பெரியது. நெப்போலியன் உயரம் 5 பீட் 2 இஞ்சஸ் ஆகும் அது பிரிட்டிஷ் அளவு 168 செ.மீ க்கு (5பீட் 6 இஞ்சஸ்) சமமாகுமாம். அது சாதாரண குடிமகன் உயரம் தானாம். பின் ஏன் நெப்போலியனை அவ்வாறு அழைத்தார்கள் என்றால், அவர் பிரான்ஸ் தேச மன்னர் மிகவும் வேகமற்றவர் ஆதனால் மற்ற நாடுகள் படையெடுப்பிற்கு ஆளாக நேரிட்டது மட்டுமல்லாமல், அங்கே பஞ்சமும், வறுமையும் ஏற்பட்டதாம். அப்போது நெப்போலியன் ஒரு சாதாரண 'Petit Corporal' படை வீரராகத் தான் இருந்தாராம். மக்கள் புரட்சியினை சந்தர்ப்பமாக பயன்படுத்தி பிரான்ஸ் தேச அரியணையில் ஏறி பக்கத்து நாடுகளை வெல்லக் கூடிய சக்ரவர்த்தியாக உயர்ந்தாராம். பிரான்ஸ் மொழியில் Petit என்றால் அன்பானவர் என்று அழைப்பார்களாம். அவர் அனைத்து படை வீரர்களிடமும் அன்பாகவும், சகோதரர் போல நடந்து கொண்டாராம். ஆகவே அவரை அந்த புனைப் பெயரில் அழைத்தார்களாம். இன்னொரு காரணமும் சொல்லப் படுகிறது. அவர் 5 அடி 6 அங்குலம் இருந்தாலும் அவரை பாதுகாக்கும் குறிப்பிட்ட வீரர்கள் 6 அடி உயரம் கொண்டவர்களாம். ஆகவே நெப்போலியனை எப்போதும் குதிரையில் அமர்ந்திருப்பது போலவும், அவரது பாதுகாப்பு படையினர் தரையில் வருவதுபோன்ற படங்கள் இடம் பெற்றதாம்.

          ஆகவே காலங்காலமாக வந்த தவறான தகவல்களை நாம்  புரிந்து கொள்வதுடன் நமது வருங்கால சந்ததியினரும் தெரிந்து கொள்வது நல்லதல்லவா?

         

Tags: கட்டுரை

Share this