தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கிராஅத் போட்டி
தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில் இன்ஷா அல்லாஹ் தென்னிந்திய அளவிலான மாபெரும் கிராஅத் போட்டி.
சமுதாயத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் அஞ்சுமன் அறிவகம் நடத்துகிறது.
வக்ஃப் வாரிய தலைவர் மாண்புமிகு அப்துல் ரஹ்மான் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபூபக்கர் அவர்கள், மாநில துணைத் தலைவர் நவாஸ்கனி அவர்கள், ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அவர்கள் உள்ளிட்ட சங்கைமிகு உலமா பெருமக்கள் மற்றும் சமுதாய இயங்கங்களின் தலைவர்கள், சமுதாய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
கிராஅத் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 3.5 இலட்ச ரூபாய் பரிசுத் தொகையை அஞ்சுமன் அறிவக நிறுவனர் அல்ஹாஜ் ஜபருல்லாஹ் அவர்கள் வழங்குகிறார்.
அனைவரும் வருக!
Tags: சமுதாய செய்திகள்