Breaking News

அறுவடைத் திருநாள். நமது இலக்கு.CMN.சலீம்

நிர்வாகி
0


இந்த அறுவடைத் திருநாளில் இப்படி சில முடிவுகளை எடுத்துக் கொண்டால் நமது இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் கூட்டு வாழ்க்கை முறைக்கும் நிச்சயம் வலிமை சேர்க்கும்.அது அல்லாஹ்வின் அருளைப் பெற்றதாகவும் இருக்கும்.


* முஸ்லிம்களில் விவசாய நிலம் வைத்திருப்போர் குத்தகைக்கு விடாமல் முடிந்தவரை அவர்களே நேரடியாக பயிரிடும் மனநிலைக்கு மாறுவது.


* நிலம் இல்லாதவர்கள் அல்லது வைத்திருந்த நிலத்தை விற்றவர்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டிற்குள் கால் ஏக்கர் நிலமாவது வாங்கும் முயற்சியில் இறங்குவது.

 

* நவீனகல்வி வணிகம் இவற்றின் மூலம் ஈட்டும் பணத்தின் பெரும்பகுதியை கொண்டு நஞ்சை புஞ்சை நிலங்கள் வாங்குவதை கலாச்சாரமாக மாற்றிக்கொள்வது.


இது பேப்பர் பணத்தை உண்மையான செல்வமாக மாற்றும் ஆக்கப்பூர்வமான செயல்.

   

* பொருளாதாரத்தில் எவ்வளவு மோசமான நிலைக்கு போனாலும் நிலத்தை விற்பனை செய்வதில்லை.    


* விவசாயத்தை பணம் சம்பாதிக்கும் தொழிலாக கருதாமல் அதை உயிர்களுக்கு உணவளிக்கும்  வழிபாடாக கருதுவது. 


* புதிதாக விவசாயத்தில் இறங்குபவர்கள் பாரம்பரிய நெல் வகைகள் சிறுதானியங்கள் உள்ளிட்டவைகளை இயற்கை முறையில் விவசாயம் செய்வது.


* விவசாயத்தின் மூலம் நிலத்துக்கு நீருக்கு காற்றுக்கு மனிதர்களுக்கு பூச்சிகளுக்கு கால்நடைகளுக்கு என யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படுத்த கூடாது என்பதை கொள்கையாக வைத்திருப்பது.


* விளைச்சலை வீட்டிற்கோ அல்லது விற்பனை நிலையத்திற்கோ கொண்டு செல்லும் முன்பாக அதற்குரிய ஜக்காத்தை கொடுத்து சுத்தப்படுத்துவது. 


* அறுவடை காலங்களில் இரத்த உறவுகளை அழைத்து உற்பத்தியான பொருட்கள் சிலவற்றை அன்பளிப்பாக கொடுத்து அனைவரும் கூடி விருந்துண்டு மகிழ்வது.


* வீட்டில் வளரும் பிள்ளைகளை இந்த அழகிய வாழ்க்கை முறைக்கு பழக்கப்படுத்துவது.


இவை அனைத்தும் தமிழ் நிலம் சார்ந்த அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய இஸ்லாமிய வாழ்க்கை முறை.

Tags: பயனுள்ள தகவல்

Share this