கண்ணியம் நிறைந்த லால்பேட்டை உள்ளூர், வெளியூர், வெளிநாடு மேன்மைமிகு இஸ்லாமிய சகோதரர்களுக்கு...
நிர்வாகி
0
நமது ஊரில் நான்கு ஆண்டுகள் மார்க்க கல்வி பயின்று ஆலிம் பட்டமும் ஃபாழில் பட்டமும் பெற்று நமது ஊரிலுள்ள மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் நீண்டகாலமாக பேராசிரியராக பணியாற்றுகிற நான் நமது ஊருக்கு நன்மையையும் சந்தோசத்தையும் பெரும் மதிப்பையும் பெற்றுத் தரும் விதத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து அரபுக் கல்லூரிகளிலும் மூன்று ஆண்டுகால பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார்-6300 நபிமொழிகளை கொண்டுள்ள மிஷ்காத்துல் மஸாபீஹ்.
என்ற ஹதீஸ் நூலிலுள்ள
சுமார் 1300 நபிமொழிகளுக்கு விளக்கம் தரும் விதமாக ஒரு நூல் தொகுப்பை எழுதியுள்ளேன்.
இன்ஷா அல்லாஹ் *இன்று 25 /2 /2022* வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு நம்முடைய *ஜாமிஆவின் முதல்வர் அல்லாமா*
*A நூருல் அமீன் ஹஜ்ரத் கிப்லா அவர்களின் தலைமையில் தாருத்தப்ஸீர் கலைக் கூடத்தில்* அதன் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சி சீரோடும் சிறப்போடும் நடைபெறுவதற்கு தாங்கள் அனைவரும் துஆசெய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
மௌலவி
*S முஹம்மது அலி ஃபாஜில் மன்பயீ*
பேராசிரியர்
J.MA அரபுக் கல்லூரி லால்பேட்டை
Tags: லால்பேட்டை