லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை நடத்திய இலவச மருத்துவ முகாமில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!!
புகழ் அனைத்தும் இறைவனுக்கே..!!
லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளையின் இரண்டாம் இலவச மருத்துவ முகாம்
வல்ல ரஹ்மானின் நாட்டத்தால், இன்று 22-03-2022 காலை 10.00 முதல் மாலை 5:00 வரை, லால்பேட்டை சுகாதார மையம் (LALPET HEALTHCARE CENTRE) வளாகத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது,
இதில் எலும்பு முரிவு, எலும்பு அடர்த்தி கண்டறியும் சிறப்பு ஸ்கேன், எலும்பு வலிமை கண்டரிதல் மற்றும் எலும்பு /மூட்டு சிறப்பு மருத்துவர் மற்றும் பொது மருத்துவர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டார்கள்.
இதில் லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து 250 க்கும் அதிகமான பயனாளிகள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர். அனைவருக்கும் கட்டணம் இல்லா மருத்துவ பரிசோதனையும், கட்டணம் இல்லா மருந்துகளும் வழங்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட சிறப்பு மருத்துவர்கள், லால்பேட்டை சுகாதார மையம் (LHC) மருத்துவர்கள்,ஊழியர்கள் மற்றும் இந்த ஏற்பாட்டை சிறப்பாக முன்னின்று நடத்திய லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவ அறக்கட்டளையின் நிர்வாகிகள் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் .
என்றும் மருத்துவ துறையில், மக்களுக்கான பணியில்...
லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை
( LALPET MEDICAL TRUST)
Tags: லால்பேட்டை