Breaking News

ஒவைசி : சங்கிகளும் - மங்கிகளும்... ஆயங்குடி மு.இ. நஸீருத்தீன்

நிர்வாகி
0



நான் ஒவைஸி ஸ்டைல் பாலிடிக்ஸிற்கு ஆதரவானவன் அல்ல. ஆனால், அவர் கட்சிக்கு உ.பியில் கிடைக்காத அங்கிகாரத்தை கிடைத்துவிட்டதாக திரித்து, அங்கு அவர் பாஜக ஆட்சி அமைந்திட மறைமுக காரணமாகிவிட்டார் என சிலர் பரப்புகிறார்கள்.


அவரின் கட்சி உ.பியில் போட்டியிட்ட 100 தொகுதிகளும் சேர்த்து சுமார் 22.3 லட்சம் வாக்குகள் வாங்கிவுள்ளதாகவும், தொகுதி ஒன்றுக்கு சராசரியாக 20000 வாக்குகள் வாங்கிவுள்ளதாகவும் பரப்பப்படுகிறது. அம்மாதிரியான தொகுதிகளில் யாதவின் எஸ்.பி கட்சி 1000 வாக்குகள் வித்தியாசங்களிலேயே தோற்றுள்ளது, அதனால் அங்கு பாஜக வென்றிருப்பதாகவும் பரப்புவதோடு - 'இயக்கங்கள் தேவையா?' என வழமையாக உள்நோக்கோத்தோடு கேள்வியும் எழுப்புகின்றனர்.


இவ்வாறு சமூகவலைத்தளங்களில் பரப்புவதும், கேள்வியெழுப்புவதும் யாரென உற்றுப் பார்த்தால் - அநேகமானவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள், அல்லது திமுக ஆதரவு நிலைப்பாடு கொண்ட முஸ்லிம்கள். 


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வந்துவிடக்கூடாது என்ற ஒற்றை நன்னோக்கில், எதிர்பார்த்த தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையிலும் -  தங்களது வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் திமுக அணிக்கு செலுத்திய போதும் - பின்னாளில் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அவ்வாறே வாக்களித்திருந்த போதும் - நகர்புற உள்ளாட்சி மன்றங்களில் முஸ்லிம்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை திமுக வழங்கப்படாததை கண்டித்து பேசவோ, கருத்துச் சொல்லவோ வாய்த்திறக்காதவர்கள் தான் இன்றைக்கு உவைஸியின் தனிக்களம் குறித்து உண்மைக்கு புறம்பானதை பரப்புகிறார்கள், இயக்கங்களின் இருப்புக் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். 


ஒரு வாதத்திற்கு அவர்களின் உள்நோக்கம் கொண்ட இந்த பழிச்சொல் உண்மையென எடுத்துக் கொள்ளும்பட்சத்தில்: 


கடந்த 2017ல் அங்கு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் 38 தொகுதிகளில் தனித்து நின்று, 4 தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்த எம்ஐஎம் கட்சியை அரவணைத்து, அழைத்து சொச்ச இடங்களையாவது ஒதுக்கி, அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாதது எஸ்.பி., பி.எஸ்.பி., காங்கிரஸின் குற்றமும் கூடத் தானே? சுமார் 21% முஸ்லிம்களை கொண்ட ஒரு மாநிலத்தில், எம்.ஐ.எம்-ஐ தனிக்களம் காண நிர்பந்தித்த மேற்படி மூன்று கட்சிகளும் பாஜகவின் பி டீம் சந்தேக லிஸ்டில் ஏன் பட்டியலாகாது? 


பிரதான கட்சிகளும் தங்களின் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள், தனித்து நிற்பதும் கூடாதென்றால் - உவைஸி என்ன ஹைதராபாத் பிரியாணி கிண்டவா கட்சி நடத்துகிறார்?


எட்டாத உயரத்தை எட்டிவிட்டதாக மக்களிடம் நிறுவ - புள்ளிவிவரங்களை திரிப்பதில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் சங்கிகள் என்றால் - சொந்த்த மக்களிடையே உவைஸியின் பிம்பத்தை உடைக்க, அதன்மூலம் (இதயத்தில் மட்டும்) இடம் கொடுத்து தங்களை ஒரே (மோனோ) சிறுபான்மை பாதுகாவலர் என்ற மாயை உருவாக்க - உவைஸிக்கு கிடைக்காத அங்கிகாரத்தை கிடைத்துவிட்டதாக - கூட்டிக் கொடுப்பதில் - உயர்த்திக் கூட்டிக் காட்டுவதில் திமுகவினரில் சிலர் கைதேர்ந்த மங்கிகள். 


இதை சொல்லக் காரணம் யாதெனில் - திமுகவினரால் பரப்பப்படுகிற படி, உ.பியில் போட்டியிட்ட 100 தொகுதிகளும் சேர்த்து 22.3 லட்ச வாக்குகளோ, தொகுதி ஒன்றுக்கு சராசரியாக 20 ஆயிரம் வாக்குகளோ உவைசியின் எம்.ஐ.எம் கட்சி பெறவில்லை. உண்மையில் அது போட்டியிட்ட 100 தொகுதிகளில் ஒன்றை தவிர மற்ற எல்லாத் தொகுதிகளிலும் எம்.ஐ.எம் டெபாசிட்டை இழந்திருக்கிறது. 


டெபாசிட் பெற்ற அந்த தொகுதியிலும் கூட பாஜக வென்றதற்கு பி.எஸ்.பியும், காங்கிரஸுன் தான் காரணம். ஏனெனில், அங்கு எம்.ஐ.எம் பெற்ற வாக்குகளை எஸ்.பி கணக்கில் சேர்த்தாலும் கூட எஸ்.பி வென்றிருக்காது என்பது நிதர்சனம். 


டெபாசிட்டை கூட இழந்த மீதமுள்ள 99 தொகுதிகளில் பெரும்பாலானதில் அது 5 ஆயிரத்தைக் கூட தொடவில்லை. பலவற்றில் 2 ஆயிரத்திற்கும் கீழ், ஒன்றில் அதுபெற்றது வெறும் எழுநூற்றி சொச்சம். 


ஆகையால் உடன்பிறப்புக்களே - தங்களுக்கு எவ்விதத்திலும் நிகரில்லா உவைஸிக்கு புள்ளிவிவரங்களை திரித்து, அவருக்கு துரோகி பிம்பத்தை நிறுவ முயலாதீர்கள்! அண்டப்புழுகு அச்சில் ஏறாது!! - மாறாக, சிறுபான்மை மக்களுக்கு உரிய மரியாதையையும், தகுதிக்கேற்ப பிரதிநிதித்துவத்தையும் கொடுத்து அவர்கள் இதயத்தில் நீங்கள் இடம்பெற முயலுங்கள்! வாக்கு வாங்கியில் நிலைப்பர்!!


- ஆயங்குடி மு.இ. நஸீருத்தீன்

   11-மார்ச்-2022

Tags: கட்டுரை

Share this