கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் மூன்றாம் ஆண்டு இஃப்தார் விழா மற்றும் ஐந்தாம் ஆண்டு துவக்கவிழா முப்பெரும் விழாவாக சிறப்பான முறையில் நடைபெற்றது!
தோஹா ஏப்ரல் 15,2022
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டு கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் மூன்றாம் ஆண்டு இஃப்தார் விழா மற்றும் ஐந்தாம் ஆண்டு துவக்கவிழா, நூல் அறிமுக விழா, "காயிதேமில்லத் விருது" வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக 15-04-2022 வெள்ளிகிழமை மாலை 4 மணியளவில் தோஹாவில் உள்ள ஏசியன் டவுன் கிரிக்கெட் ஸ்டேடியம் பெருஅரங்கில் வெகு சீரோடும், சிறப்போடும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
விழா நடைபெற்ற அரங்கத்திற்கு மெளலானா மொளலவி ஷம்சுல் மில்லத் K.A முஹம்மது ஜக்கரிய்யா ஹள்ரத் அவர்களின் பெயரையும், விழா நடைபெற்ற அரங்க நுழைவாயிலுக்கு மெளலானா மொளலவி ஷேகுல் பிக்ஸ் S.A அப்துர் ரப் ஹள்ரத் அவர்களின் பெயரையும், இப்தார் நடைபெற்ற அரங்கிற்கு மெளலானா மொளலவி ஷேகுல் ஹதீஸ் A.E.M அப்துர் ரஹ்மான் ஹள்ரத் என மூன்று ஜாமிஆவின் பேராசிரியர்களின் பெயர்களையம் நினைவுகூறும் விதமாக சூட்டப்பட்டிருந்தது.
கத்தார் லால்பேட்டை ஜமாஅத் மூத்த உறுப்பினர் முஹம்மது மஹ்ரூப் தலைமையேற்க, முஹம்மது தஸ்லீம் முன்னிலை வகிக்க, தலைவர் முஹம்மது உஸாமா, செயலாளர் ஷபீர் அஹமது , பொருளாளர் அப்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் சிறப்பாக இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
துவக்கமாக லால்பேட்டை முஹம்மது உசேன் இறைவசனம் ஓத,ஜமாஅத்தின் தலைவர் முஹம்மது உஸாமா அனைவரையும் வரவேற்க,செயலாளர் ஷபீர் அஹமது ஜமாஅத்தின் செயல்பாடுகள் வருங்கால திட்ட பணிகள் குறித்தும் பேசினார், தொடர்ந்து ஜமாஅத்தின் ஒருங்கிணைப்பாளர் அஹமது ரிலா அவர்கள் "லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளையின்" பணிகள், எதிர்கால திட்ட பணிகள் சேவைகளை பற்றி எடுத்துரைத்தார்.
"கத்தார் இஸ்லாமிய கலாச்சார” நிலையத்தின் அமைப்பாளர் மொளலவி அஜ்வி மளாஹிரி அவர்கள் ரமலானை பற்றியும், ஸதகா, ஜகாத், பித்ரா பற்றி சிறப்பு பயான் நிகழ்த்தினார்கள்.
நூல் அறிமுக விழா: கவிஞர் புதுகை சிக்கந்தர் எழுதிய "காற்றமர்ந்த ஊஞ்சல்" நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது, நூலினை பற்றிய சிறிய அறிமுக கவிதைகளை புதுகை சிக்கந்தர் வாசித்தார்கள், நூலினை சிறப்பு விருந்தினர்கள்,ஜமாஅத்தின் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர் தொடர்ந்து கவிஞர் கொடிநகரம் ஜிப்ரில் அவர்களை லால்பேட்டையை பற்றி கவிதைகளாக வாசித்தார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக INDIAN EMBASSY கீழ் இயங்ககூடிய Indian Community Benevolent Forum (ICBF) தலைவர் ஜியாத் உஸ்மான், கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
காயிதேமில்லத் விருது வழங்கப்பட்டது:-
லால்பேட்டையில் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக சேவைபுரிந்த அமைப்புகளுக்கான விருது வழங்கப்பட்டது.
*லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளைக்கு விருது வழங்கப்பட்டது விருதினை ஜமாத்தின் முன்னாள் உறுப்பினர் முஹம்மது மஹ்ரூப் அவர்கள் "லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளையின்" செயலாளர் அஹமது ரிலா அவர்களிடம் "காயிதேமில்லத் விருது"வழங்கி கொளவரவிப்பட்டது.
*லால்பேட்டை பெருநகர தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்திற்கு விருது வழங்கப்பட்டது,விருதினை ஜமாஅத்தின் செயலாளர் ஷபீர் அஹமது லால்பேட்டை தமுமுகவின் செயலாளர் கத்தாருக்கு வருகை புரிந்த முஹம்மது ஜசூர் அவர்களிடம் "காயிதேமில்லத் விருது" வழங்கி கொளவரவிப்பட்டது.
மேலும் கத்தாரில் சிறப்பாக செயல்பட கூடிய அமைப்புகள், சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது:-
*ICBF - Indian Community Benevolent Forum,
*கத்தார் காயிதேமில்லத் பேரவை,
*கத்தார் அயலக திமுக அணி,
*ஒருங்கிணைந்த தமிழர் பேரவை,
*மனிதநேய கலாச்சார பேரவை,
*இந்திய-கத்தார் இஸ்லாமியப் பேரவை,
*கத்தார் இந்தியன் சோசியல் ஃபாரம்,
*தாய் மண் கலை இலக்கிய பேரவை,
*சஹாபாக்கள் நூலகம்,
*மன்னை சாதிக் பாட்சா,
*சமூக ஆரவாளர் ஹாஜி முஹம்மது
சிறந்த சமூக சேவை அமைப்பிற்கான விருதினை ஜமாஅத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் அவர்களிடம் "காயிதேமில்லத் விருது"வழங்கி கொளரவிக்கப்பட்டது.
மேலும் கத்தாரில் உள்ள சமுதாய அமைப்புகள் மற்றும் ஜமாஅத்தின் நிர்வாகிகள் கத்தார் காயிதேமில்லத் பேரவையின் தலைவர் முஹம்மது முஸ்தபா, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயர்குழு உறுப்பினர் கீழக்கரை முஹம்மது உசேன்- ஆயங்குடி யாசின்,கத்தார் அயலக திமுக அணியின் செயலாளர் மதன்-ரஷீது,ஒருங்கிணைத்த தமிழர் பேரவையின் நிர்வாகிகள் சக்கந்தி சமீர்- இப்ராஹிம்,கத்தார் தமிழ் சங்கத்தின் தலைவர் ராம்செல்வம், ICC மோஹன், கத்தார் சஹாபாக்கள் நூலகத்தின் தலைவர் மணிகண்டன் ஐயப்பான், ஐக்கிய தமிழ் மன்றம் தலைவர் தஸ்தகிர் சுலைமான், இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவையின் தலைவர் இஸ்மாயில் நாகூர், கடையநல்லூர் ஜமாஅத் அப்துல் நாசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் லால்பேட்டை மண்ணின் மைந்தர்கள்,பல்வேறு ஊர் ஜமாஅத் (ஆயங்குடி, பரங்கிப்பேட்டை, காயல்பட்டினம், கீழக்கரை, கடையநல்லூர், இராஜகிரி, வழுத்தூர், நாகப்பட்டினம், உத்தமபாளையம் )மேலும் பல ஜமாஅத்தின் பிரநிதிகள்,சமுதாய சேவையாளர்கள்,தமிழின உறவுகள்,சமுதாய அமைப்பை சார்ந்தவர்கள் என பலர் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
YAFA CARGO சார்பில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது நிகழ்ச்சியில் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்பவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இறுதியாக ஜமாஅத்தின் பொருளாளர் அப்துல்லாஹ் நன்றியுரையாற்ற துஆவுடன் நிறைவுபெற்றது.
லால்பேட்டை மண்ணிற்கே உரித்தான விருந்தோம்பலுடன் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கத்தார் லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகள், மற்றும் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
ஜமாஅத்தின் பொதுக்குழு கூட்டம் -புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இதில் 2022 -2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : யக்கீன் அஹமது
துணை தலைவர் : மசியுல்லாஹ்
செயலாளர் : முஹம்மது பக்கீர்
துணை பொதுச்செயலாளர் : பைஜுர் ரஹ்மான்
பொருளாளர்: உஸாமா யூசுப்
துணை செயலாளர்கள்
1. ஷகீன் - அல் வக்ரா
2.முஹம்மது தவுசிப் - அல் மன்சூரா
3.ஷமீம் அஹமது - அல் மும்தஜா
4.முஹம்மது தவுபிக் - அல்கோர்
5.ஜெய்லானி - மொய்தர்
6.உபைத் - இண்டஸ்ட்டிரியல் ஏரியா
7.முஸ்தபா - ஐயின் காலித்
8.முஹம்மது தல்ஹா - கரபா / கார்த்தியாத்
9.முஹம்மது முனாஜ் - அல்சாத்
IT Wing : முஹம்மது தைராப்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு ஜமாஅத் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கப்பட்டது.
Tags: உலக செய்திகள் லால்பேட்டை