Breaking News

ஜித்தா லால்பேட்டை அர்ரஹ்மான் ஜமாஅத்தின் புனித ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி

நிர்வாகி
0

 ஜித்தா லால்பேட்டை அர்ரஹ்மான் ஜமாஅத்தின் புனித ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி ஷரஃபியாவில் உள்ள ஆர்யாஸ் ரெஸ்டாரண்டில்  நேற்று 15-04-2022 (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது.



நிகழ்ச்சிக்கு ஜித்தா அர்ரஹ்மான் ஜமாஅத்தின் தலைவர் T.N. ஜியாவுத்தீன் அவர்கள் தலைமை வகிக்க ஜித்தா நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.


சிறுவன் இர்ஃபானுல்லாஹ் அவர்கள் இறைவசனம் ஓதி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.


ஜித்தா அர்ரஹ்மான் ஜமாஅத்தின் செயலாளர்  J. முஹம்மது சுலைமான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


புனிதமிக்க இந்த ரமலான் மாதத்தின் சிறப்புகளைப் பற்றியும் அதன்மூலம் நாம் சுயசீர்த்திருத்தம் பெற வேண்டிய முறைகள் பற்றியும் ஜனாப் மஹபூபே ஷரீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.


இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை தலைவரும், ரியாத் அர்ரஹ்மான் ஜமாஅத் பொருளாளருமான S.M.முஹம்மது நாசர் அவர்கள் ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.


ஜித்தாவில் வசிக்கும் லால்பேட்டை சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்துக்கொண்டு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நோன்பு திறப்பு நிகழ்வை சிறப்பித்தார்கள்.


நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு பங்குகொண்ட சிறுவர்களுக்கு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை M.T. முஹம்மது ஆஷிக் அவர்கள் நடத்தினார், இதில் பங்குபெற்ற சிறுவர்களுக்கு ஜமாஅத்தின் நிர்வாகிகள் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.


இறுதியாக ஜித்தா அர்ரஹ்மான் ஜமாஅத் பொருளாளர் H. முஹம்மது அன்சர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.

 

இப்படிக்கு,


அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமாஅத்,

 ஜித்தா, சவூதி அரேபியா.








Tags: உலக செய்திகள் லால்பேட்டை

Share this