லால்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
ஏப் 21,
லால்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
முன்னதாக "மனிதநேயம் வளர்போம்,சமூகநீதி காப்போம்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது
.இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார். அவருடன் மாநிலச் செயலாளர் நாகை முபராக், மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராகிம் ஆகியோரும் பங்கேற்றனர்.
மஜகவின் அரசியல் அணுகுமுறைகளுக்கும், சகோதரத்துவம் வளர்க்கும் முயற்சிகளுக்கும் தமிழகத்திலும், வெளிநாடுவாழ் தமிழக மக்களிடையேயும் பேராதரவு ஏற்பட்டுள்ள நிலையில், லால்பேட்டையிலும் அது எதிரொலித்தது.
பொதுச் செயலாளர் அவர்களின் உரையை கேட்க மாலை 5.30 மணியிலிருந்தே அரங்கத்தில் மக்கள் திரண்டது.
கூட்டம் அதிகமானதால்,அரங்கத்தில் கீழ் தளத்திலும் தொலைக்காட்சி வசதி துரிதமாக செய்யப்பட்டு, மக்கள் அதில் அமர வைக்கப்பட்டனர். அதையும் மீறி மக்கள் திரண்டிருந்தனர்.
இதில் பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், நமக்கான களங்களில் மஜக அலை வீசுவதாகவும், எதிர்காலம் மஜகவுக்கே என்றும் உற்சாக பொங்க பேசினார்.
டெல்லியில் ராமநவமி நிகழ்வில் ஆயுதங்களுடன் சிலர் வந்ததை கண்டித்தவர்,அமைதியை சீர்குலைக்கும் மதவாத சக்திகளுக்கு பிரதமர் துணை போவதாக குற்றம் சாட்டினார்.
பிரதமர் தனது 'கள்ள மவுனத்தை ' கலைக்க வேண்டும் என்றார்.
இது நாட்டுக்கு நல்லதல்ல என்றும்,இதை உலகமே உன்னிப்பாக கவலையோடு பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
கேரளாவில் பழிக்குப்பழியாக நடைபெறும் சம்பவங்களை சம்பவங்களை சுட்டிக்காட்டி கவலை தெரிவித்த அவர், சித்தாந்த மோதல்கள் வன்முறையாக மாறி,மனித உயிர்கள் பறிப்போவது வேதனையளிக்கிறது என்றும்,அவர்களது மனைவிகளும், பிள்ளைகளும் அனாதையாவதையும் சுட்டிக்காட்டினார் .
அத்தகைய சம்பவங்கள் எல்லாம் எந்த சமூகத்தின் தரப்பிலிருந்து புறப்பட்டாலும் அதை முறியடிக்க வேண்டும் என்றார்.
அவரது உரையை கைத்தட்டி மக்கள் வரவேற்றனர்.
இதில் சாஜிதா புக் சென்டர் வெளியீடாக 'சஹாபாக்களின் வரலாறு ' என்ற வரலாற்று நூலை பொதுச் செயலாளர் வெளியிட, பனே சா ஜும்மா பள்ளி முத்தவல்லி சபீர் அகமது அவர்கள் பெற்றுக் கொண்டார்
ஊரின் அனைத்து முக்கிய பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் வருகை தந்தது ஏற்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வில் பல்வேறு சமூக மக்களும் நல்லிணக்கம் நிரம்ப வந்திருந்து இஃப்தார் விருந்திலும் பங்கேற்றனர்.
லால்பேட்டையில் மக்கள் செல்வாக்கு மிக்க கட்சியாக மஜக வளர்வதை,இங்கு வந்த மக்கள் எழுச்சி சுட்டிக் காட்டுவதாக பலரும் பாராட்டினர்.
நிகழ்வில் ஏராளமானோர் தன்னாவத்துடன் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்வுக்கு மிக அதிகமான புதிய இளைஞர்களும், மாணவர்களும் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
காயிதே மில்லத், அன்னை தெரசா,அபுல் கலாம் ஆசாத், அப்துல்கலாம், டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆகியோரின் பெயரில் சாதனையாளர்களுக்கு விருதும் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன், மாவட்ட MJVS செயலாளர், எள்ளேரி ஊராட்சி மன்ற துணை தலைவர், AMK முஹம்மது ஹம்ஜா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், துபாய் மாநகர முன்னாள் செயலாளர் சபிக்குர் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர்கள் ரியாஸ், பைரோஸ், நகர செயலாளர் யூனுஸ், நகர பொருளாளர் நூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை