Breaking News

அபுதாபியில் தமிழர்களின் ஒற்றுமையை பேசிய மாநாடு..!

நிர்வாகி
0ஏப்ரல் 24,


மஜக சார்பு வெளிநாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் வளைகுடா நாடுகளில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் சமூக நல்லிணக்க மாநாடுகளுடன் நடைபெற்று வருகின்றன.


வளைகுடா வாழ் தமிழக மக்கள் தங்களது பேராதரவை வெளிப்படுத்தும்  வகையில் பெரும் திரளாக பங்கேற்று வருகின்றனர்.


இன்று அபுதாபியிலும் அதே எழுச்சியை பார்க்க முடிந்தது.


இங்கு தமிழர் விழிப்புணர்வு மாநாடும், இன்பம் பொங்கும் இஃப்தார் நிகழ்வும் ஒரு சேர நடைபெற்றது.


ரமலான் பண்டிகையையொட்டி பெரும்பாலோர்  தாயகம் சென்றுக் கொண்டிருக்கும்  நிலையில் , அதையும் கடந்து அரங்கம் நிறைந்தது ஏற்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.


அரங்கின் நுழைவாயிலுக்கு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்  தீரன். சின்னமலை அவர்களின் பெயரும், அரங்கத்திற்கு திப்பு சுல்தான் பெயரும் சூட்டப்பட்டு நல்லிணக்கம் வெளிக்காட்டப்பட்டிருந்தது.


மேடைக்கு அமீரக ஆட்சியாளர் மேதகு ஷேஹ் கலிபா பின் ஜாயித் அந் நஹ்யான் அவர்களின் பெயர் சூட்டப்பட்டு அவருக்கு சிறப்பு செய்யப்பட்டிருந்தது.


மாலை 5.30 முதலே மனிதநேய சொந்தங்கள் பேட்ஜ்  அணிந்து வருபவர்களை உற்சாகமாக வரவேற்ற வண்ணமிருந்தனர்.


இங்கும் 'இளைஞர் மயமப்படுத்தப்பட்ட 'கூட்டத்தை பார்க்க முடிந்தது.


குறிப்பாக தமிழர் விழிப்புணர்வு மாநாடு என்பதால், MKP லட்சியத்தை ஆதரிக்கும் வகையில் பல சமூக மக்களும் வந்திருந்தனர்.


இந்த ஒருமைப்பாட்டை ,நம்பிக்கையை பலரும் வரவேற்றனர்.நிகழ்வில் இறைமறை வசனமும்,அமீரக நாட்டின் தேசிய கீதமும், தமிழ் தாய் வாழ்த்தும் ஒரு சேர வாசிக்க கூட்டம் சிலிர்த்தது.


அரங்கின் மேல் பகுதியில் பெண்கள் குழந்தைகள் புடை சூழ நிறைந்திருந்தனர்.


MKP அமீரக ஆலோசகர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் வெறுப்பை  வெறுத்து அன்பை உருவாக்க பாடுபட வேண்டும் என தனது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.


பிறகு பேசிய தமிழேந்தல் கவிதா அவர்கள் தமிழர்களின் சமகால சிக்கல்களையும், இனி ஒன்றுபட்ட செயல் பட வேண்டியதையும்  இலக்கிய நடையில் விவரித்தார்.


மவ்லவி.ஹஸன் மக்கி அவர்கள் நபிகள் நாயகத்தின் உயர் பண்புகளையும், எளிமையையும் அழகுற எடுத்துக் கூறி, தலைவர்கள் அவ்வாறு மக்களை வழி நடத்த வேண்டும்  என பேசினார்.


இஃப்தார் நோன்பு துறக்கும் நேரம் நெருங்கியதால், நிகழ்ச்சி இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டது.


இரண்டாவது அமர்வு அதே உற்சாகத்தோடு தொடங்கியது.


அமீரகத்தின் பெண்ணிய செயல்பாட்டாளரும், சட்ட நிபுணருமான ஹஸ்ஸா ஆசாத் உசேன் அவர்கள் வருகை தந்தது நிகழ்ச்சியில் 'ஹை லைட்' ஆக இருந்தது.


அவர் MKP யின் மனித நேய அணுகுமுறைகளை பாராட்டியதோடு, தமிழர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை செய்யவும் தயாராக இருப்பதாக கூறினார்.


செல்வாக்கு மிக்க பிரபல குடும்பத்தை சேர்ந்த அவர் கடைசி வரை அமர்ந்து சிறப்பித்து சென்றது MK P யின் சேவைகள் மீதான மரியாதையை வெளிப்படுத்துவதாக இருந்தது. 


நிகழ்வில்  எகிப்தின் பேரறிஞர் ஷராவி அவர்கள் விரிவுரை வழங்கிய திருக்குர்ஆனின் முதல் அத்தியாயத்தின் தமிழ் மொழி பெயர்ப்பை தனியரசு அவர்கள் வெளியிட, தமிழேந்தல் கவிதா பெற்றுக் கொண்டார்.


இதை லால்பேட்டை அன்சாரி மன்பஈ அவர்கள் தமிழில் மொழி பெயர்த்ததுள்ளார்.


நிகழ்வில் பிரபல பத்திரிக்கையாளர்  தோழர்.திருமாவேலன் எழுதிய 'இவர் தமிழர் இல்லையென்றால்  எவர் தமிழர் ? என்ற பெரியார் குறித்த நூலின் இரு பாகங்களை  மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு பெற்றுக் கொண்டார்.


அதன் இரண்டாவது பாகத்தை அய்மான் சேவை அமைப்பின் தலைவரும், பொதுச் செயலாளரும் பெற்றுக் கொண்டனர்.


தமிழகத்திற்கு வெளியே இங்கு தான் இந்நூல் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.


 மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர்  மௌலா.நாசர் அவர்கள் தீரன் சின்னமலை நூலை  வெளியிட , அபுதாபி தமிழ் மன்ற தலைவர் சிவக்குமார் அவர்கள் பெற்றுக் கொண்டார்.


இந்திய தூதரகத்துடன் இணைந்து பல பணிகளை ஆற்றி வரும் தமிழ் மன்ற தலைவர் சிவக்குமார் அவர்கள் 'இறைவனிடம் கையேந்துங்கள்' என்ற பாடலை பாட கூட்டம் ரசித்தது. அவர் தமிழக அரசுக்கு பல கோரிக்கைகளையும் முன் வைத்தார்.


நிகழ்ச்சியில் சமூக சேவை ஆற்றியவர்களுக்கு நினைவுப் பரிசுகளை மு.தமிமுன் அன்சாரி வழங்க, மெளலா.நாசர் அவர்கள் சால்வைகளை அணிவித்து சிறப்பு செய்தார்.


தனியரசு அவர்கள் பேசும் போது தமிழர்களின் விழிப்புணர்வுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், பாசிசத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் கைத்தட்டல்களுக்கு மத்தியில் பேசினார்.


அவரது உரையில் தீரன் சின்னமலை, தீரன் திப்பு சுல்தான் , கறுப்ப சேர்வை ஆகியோர் இணைந்து போராடியதை போல நாம் இருக்க வேண்டும் என்றார்.


நிறைவுரையாற்றிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வளைகுடாவுக்கும், தமிழர்களுக்கும்  இடையேயான வணிக - கலாச்சார உறவுகளை சங்கத் தமிழிலக்கியங்களை ஆதாரம் காட்டி பேசினார்.


ஹிஜாப் அணிந்த மாணவிகள் இறைவசனங்களை தமிழிலும், அரபியிலும் வாசித்ததை சுட்டிக்காட்டி, ஹிஜாப் அறிவையும், சுதந்திரத்தையும் தடுப்பதில்லை என்றார்.


எல்லோரின் மத, கலாச்சார உரிமைகளை மதிக்கும் அமீரகத்தை பாராட்டியவர், நமது நாட்டிலும் இதேயே மக்கள் விரும்புவதாக கூறினார்.


தமிழர்கள் இங்கு ஒற்றுமையோடு திரண்டிருப்பதை பாராட்டியவர்,  இதை வளர்த்தெடுக்க வேண்டியது அனைவரின் கடமை என்றார்.


இம்மாநாட்டில் சாதி, மத ம் கடந்து பலரும் வந்திருந்ததும், தமிழக அமைப்புகளின் பிரதிநிதிகள்  கூடியிருந்ததும் மாநாட்டின் நோக்கம் வெற்றியடைந்துள்ளதாக அனைவரும் பாராட்டினர்.


இதில் மூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.


நிகழ்ச்சிக்கு அமீரக துணைச் செயலாளர் லால்பேட்டை தையூப் அவர்கள் தலைமையேற்க, அபுதாபி துணைச் செயலாளர் தோப்புத்துறை ஹக்கீம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.


துபாய் மாநகர பொருளாளர் பயாஸ் அவர்கள் நன்றி கூறினார்.


நிகழ்ச்சியை மர்ஹபா ஒருங்கிணைப்பாளர்  M.சுகைபுதீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.


அமீரக பொருளாளர் அபுல் ஹஸன், அமீரக ஆலோசகர் ஷேக் தாவூது, அல் அய்ன் மாநகர செயலாளர் இம்ரான், மர்ஹபா ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரபீக் , ஆயங்குடி ரியாஸ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


50 க்கும் மேற்பட்ட அபுதாபி MKP ஊழியர்களின் உழைப்பில் அபுதாபி மாநகரம் நடத்திய இந்நிகழ்வில் பயனுற அமைந்தது  பாராட்டத்தக்கது.

Tags: உலக செய்திகள்

Share this