லால்பேட்டை மெயின்ரோடு நண்பர்கள் சார்பாக நமதூர் வளர்ச்சிக்கான கோரிக்கை
லால்பேட்டை மெயின்ரோடு நண்பர்கள் சார்பாக நமதூர் வளர்ச்சிக்கான கோரிக்கை மற்றும் ஆலோசனை மனு லால்பேட்டை பேரூராட்சியில் அதன் தலைவர் ஹாரிஸிடம் அளிக்கப்பட்டது!!
09 ஏப்ரல் 2022:
லால்பேட்டை மெயின்ரோடு நண்பர்கள் சார்பாக நமதூர் வளர்ச்சிக்கான கோரிக்கை மற்றும் ஆலோசனை மனு லால்பேட்டை பேரூராட்சியில் அதன் தலைவர் ஹாரிஸிடம் அளிக்கப்பட்டது, 7-வது வார்ட் உறுப்பினர் ஜாக்கிர் (எ) ரியாஜுல்லாஹ் அவர்களும் உடனிருந்தார்.
படித்துப்பார்த்துவிட்டு நல்ல ஆலோசனையென வெகுவாக பாராட்டினார் கூடவே விவரமாக நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டோம், அனைத்தையும் செவிசாய்த்து தக்க சமயத்தில் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
பேரூராட்சி மன்ற தலைவரிடன் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் நகல்:-
லால்பேட்டை பேரூராட்சி மன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு மெயின்ரோடு நன்பர்கள் சார்பாக அனைத்து வார்ட் உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணை தலைவர் அவர்களுக்கு எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு இத்துடன் நமதூர் வளர்ச்சிக்கு எங்களின் ஆலோசனை மற்றும் கோரிக்கையினை தங்களுக்கு தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
பசுமை லால்பேட்டை:-
• அனைத்து வார்ட்களிலும் உள்ள தெருக்களில் மரம் நடுதல்,
• அதனை கூண்டு அமைத்து பராமரித்தல்,
• அப்பராமரிப்பை அந்தந்த வார்ட் உறுப்பினரின் மேற்பார்வையில் செய்தல்
தூய்மை லால்பேட்டை:-
• தினந்தோறும் (குறைந்தபட்சம் வாரம் 3 - 4 முறை) அனைத்து தெருக்களில் உள்ள குப்பைகளை அள்ளுதல், அவ்வேலைகளை செய்வதற்கு நிரந்தர ஆட்களை அமர்த்துதல் அவர்களுக்கு தேவையுடைய வாகனம் மற்றும் பொருட்களை ஏற்பாடு செய்து கொடுத்தல்
• மாதமிருமுறை தெருக்களில் இரு பக்கமும் உள்ள புற்களை களைதல்
• வாரவொருமுறை கொசுமருத்து தெளித்தல், அது உருவாகும் இடமறிந்து அதனை அகற்றுதல்,
• ஓவ்வொரு ஜும்ஆ நாளிலும் பிளீச்சிங் பவுடர் அடித்தல்,
• அனைத்து தெருக்களிலும் 100 மீட்டர் இடைவெளியில் குப்பைத்தொட்டி அமைத்தல், அக்குப்பைத்தொட்டியைச் சுற்றி பிரதிவாரம் பிளீச்சிங் பவுடர் அடித்து பராமரித்தல்
• குப்பையை குப்பைத்தொட்டியைத் தவிர மற்ற இடங்களில் கொட்டுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தல், அதனை அறிவிப்பு பலகை வைத்து அறிவிப்பு செய்தல்
• போக்குவரத்திற்கு இடையூராக இருக்கும் ஆடு, மாடு, நாய், பன்றி உள்ளிட்டவற்றை தெருக்களில் திரிவதை தடுத்தல், துரிதமாக மெயின் ஹைவேக்களில் உடணடியாக செயல் படுத்துதல்....
• பயிர்கள் மற்றும் நம் வீட்டு பிள்ளைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாய், பன்றி & குரங்குகளின் அட்டகாசத்தை துரிதமாக ஓழித்தல்.
• கோழி, ஆடு, மாடு & மீண் கழிவுகளை ஏரிக்கரை சாலை அருகாமையில் கொட்டுகிறார்கள் இதனால் காற்று நீர் நிலைகள் மாசுபடுகிறது, அதிக துர்நாற்றம் வீசுகிறது, இதனை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுத்தல்
லால்பேட்டையின் அடையாளம் (Landmarks):-
• நமதூர் பல தெருக்களுக்கு புழக்கத்தில் உள்ள பெயர்கள் அரசு ஆவணத்திலில்லை, அதனை துரிதமாக புழக்கத்தில் உள்ளதுபோல் அரசு Gazzetteல் மாற்றம் செய்தல்.
• ஓவ்வொரு தெருக்களின் பெயர்களையும் வழிகாட்டும் அடையாளக்குறியோடு (சுவற்றில் இல்லாமல்) Sign board அமைத்தல்.
• நமதூரின் ஓவ்வொரு நுழைவு வாயிலிலும் (லால்பேட்டை எல்லைகளான ஏரிக்கரை சாலை, தர்கா பாலம் & கல்லடி மாமரம்) நினைவு வளையம் (Arch) அமைத்து போக்குவரத்திற்கு தொந்தரவில்லாமல் ஊரை அடையாளப்படுத்துதல்.
ஓளிமயமான லால்பேட்டை:-
• நமதூர் அனைத்து தெருக்களின் தெருவிளக்குகளையும் காலத்திற்கேற்ற பழைய லைட்களை மாற்றியமைத்து புதிய LED லைட்களாக மாற்றியமைத்தல்,
• லால்பேட்டை எல்லைகளான சாவடி முதல் தர்கா பாலம் வரை மற்றும் கைக்காட்டி முதல் கல்லடி மாமரம் வரையில் போதிய வெளிச்சமில்லை, அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய Post & விளக்குகள் அமைத்து ஓளிமயமான லால்பேட்டை உருவாக்க நடவடிக்கை,
• தேவையான இடத்தில் ஹைமாஸ் லைட் அமைத்தல்
சமூக சேவை லால்பேட்டை:-
• லால்பேட்டை கைக்காட்டி, சிதம்பரம் மெயின்ரோடு & சாவடி போன்ற இடங்களில் நிரந்தர தண்ணீர் பந்தல் அமைத்தல்.
• வெளியூரிலிருந்து நள்ளிரவில் ஊர் திரும்பும் பயணிகளுக்கு எவ்வித சிரமமில்லாமல் மேலே குறிப்பிட்ட பேருந்து நிறுத்துமிடத்திலிருந்து வீடு திரும்ப வாகனம் (ஆட்டோ) அங்கிருக்குமாறு செய்தல்.
• மேலே குறிப்பிட்ட பேருந்து நிறுத்துமிடத்தில் பயணிக்கு உதவும் பொருட்டு பேருந்து அட்டவனை அமைத்தல்.
• புதிய சாலை போடும்போது பழையசாலையை பெயர்த்தெடுத்து நன்றாக அமைத்தல் மற்றும் Speed brake தேவையான இடத்தில் மட்டும் சுவர்போல் எழுப்பாமல் நன்றாக அமைத்தல், அதனை அடையாளப்படுத்த வண்ணம் பூசுதல்.
எதிர்காலத்திற்கு செய்ய வேண்டிய சேவைகள்:-
• நம் நாட்டின் (முக்கியமாக நமதூர்) அரசாங்க வேலை அல்லது அரசு சார்ந்த வேலைகளை நமதூர் பிள்ளைகள் பெற, அதற்கான தகுதியினை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகளை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை
• ஒவ்வொரு வார்ட் உறுப்பினர்களின் தலைமையில் தெருவிற்கு 3 பேர் என குழு அமைத்து அந்தந்த தெருக்களில் வீட்டுலுள்ளவர்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதி, தகுதிக்கேற்ற வேலை, மேற்படிப்பு, அரசிடமோ அல்லது தனியாரிடமோ பெற வேண்டிய சேவைகள், வயது வந்தும் பொருளாதரத்தால் திருமண தடை, ஜகாத் பெற தகுதி பெற்றவர்கள் என பல தேவைகள் தொகுத்து அமைத்தல் (Database Creation), அதற்கேற்றார்போல் நம் சேவையினை செம்மைபடுத்துதல்.
• ஒவ்வொரு வார்ட் உறுப்பினரும் தனித்தனி வாட்ஸ்அப் குரூப் அமைத்து, அதில் அவர்கள் ஆற்றும் சேவைகள் மற்றும் கணக்கு வழக்குகளை பதிவிடுதல் ... அக்குரூப்பில் அந்த வார்ட்க்குட்பட்டவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் (Admin only option - குரூப் மெம்பர்கள் பார்வையிட முடியும்)
• தவறான பழக்கவழக்கத்திற்கு இளைஞர்கள் செல்லாமலிருக்க, சென்ற இளைஞர்களை நல்வழிப்படுத்த தகுந்த நடவடிக்கை.
• நமதூருக்கு பொதுவான நல்லதொரு விளையாட்டு மைதானம் இடம் தேர்வு செய்து அமைத்தல்
• ஊர் & தெருக்களின் நுழைவு வாயிலில் CCTV கண்கானிப்பு அவசியம்
• சரியான வடிகாலை புதிய தெரு உருவாகும் போதே அமைத்தல்
• நமது MLAs & Ministers டம் முன்னெடுத்து செய்ய வேண்டிய சேவைகள்
• Bus depot, petrol station, அரசு மருத்துவமனை, அரசு அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் போன்றவைகள் அமைய வேண்டும், அதற்கான இடத்தேர்வு முன்கூட்டியே தேர்வு செய்தல் அவசியம்
• எதிர்காலத்தில் லால்பேட்டை எல்லையில் (கல்லடி மாமரம்) அமையவிருக்கும் ஹைவே அருகில் நமதூர் அடையாளத்துடன், பஸ் வாகனம் நிறுத்துமிடம், ஒய்விடம், Toilet facilities, உணவகம், ஹைமாஸ் விளக்குகள் போன்ற நவீன வசதிகளுக்கு முன்னெடுப்பு செய்தல்
• சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தொழிற்சாலைகள் அமைய முன்னெடுப்பு
• நமதூர் பகுதியின் வீரானம் ஏரி மற்ற பகுதிபோல நன்றாக செடி மரங்களை களைந்து தூர்வாருதல்
• நமதூரை பொருத்தமட்டில் நிறைய புதிய வீடு மற்றும் தெருக்களின் வளர்ச்சியால் பழைய வடிகால் அமைப்பால் இனியும் பயனில்லை ஆதலால் இதற்கு தீர்வு ஓருங்கிணைந்த பாதாள சாக்கடைத் திட்டம் மட்டுமே, அதற்கேற்றவாறு அந்த Process க்கு முன்னெடுப்பு செய்தல் மற்றும் சுத்தரிப்பு செய்ய இடம் தேர்வு போன்ற நடவடிக்கையினை தற்போதிலிருந்தே தொடங்குதல்.
Tags: லால்பேட்டை