லால்பேட்டையில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் ஆர்ப்பாட்டம்
லால்பேட்டை கை காட்டியில் ஃபிரான்ஸ் நாட்டு தீவிரவாதிகள் மற்றும் இமானுவேல் மெக்ரானை கண்டித்து ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கடலூர் மாவட்டம் சார்பாக 31/10/2020 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கடலூர் மாவட்ட தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் எம் ஒய் அப்துல் அலீம் சித்தீக் ஃபாஜில் மன்பயீ அவர்கள் தலைமை தாங்கினார்கள் . மாவட்ட செயலாளர் மவ்லவீ தய்யுப் பய்யாஜிஅவர்கள் வரவேற்புறை நடத்தினார்கள் .
மாநில செயலாளர் அப்துல் காதிர் ஹஸனி கண்டன உரை நிகழ்த்தினார்கள் .
அதை தொடர்ந்து பாப்புலர் ஃபிரண்ட் கடலூர் மாவட்ட தலைவர் மவ்லவீ ஃபயாஜ் அஹமது அவர்களும் எஸ்டிபிஐ மாவட்ட துணை தலைவர் ஷர்புதீன் ஷரீஃப் அவர்களும் கண்டன உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சென்னை மண்டல பொருப்பாளர் மவ்லவீ ஆபிருத்தீன் ஹஜ்ரத், எஸ்டிபிஐ செயல் வீரர்கள் , PFI சகோதரர்கள் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தோழர்கள்
ஊர் ஜமாஅத்தினர் என அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்ட நிகழ்வு லால்பேட்டை மவ்லவீ எஹயா பாகவி அவர்களின் நன்றி யுரை யோடு நிறைவு பெற்றது.
காவல்துறை யினர் சிறப்பாக ஒத்துழைப்பு செய்து நிகழ்வு சிறப்பாக நடை பெற ஆவண செய்து தந்தனர் .
Tags: லால்பேட்டை