முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து சிதம்பரத்தில் PFI கண்டன ஆர்ப்பாட்டம்
முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
ராம நவமி பேரணிகளின் போது குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பீகார், கோவா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ராம நவமி ஊர்வலங்களின் போது நடத்தப்பட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் நாடு தழுவிய முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்களுக்கான இந்துத்துவா அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். ஹரித்வாரிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் இந்துத்துவ நிகழ்ச்சிகளில் இனப்படுகொலைக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது இதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடலூர் மாவட்டம் சார்பாக சிதம்பரத்தில் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சிதம்பரம் ஏரியா தலைவர் கபீர் தலைமை தாங்கினார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடலூர் மாவட்ட தலைவர் பயாஸ் அஹமது மன்பஈ எஸ்டிபிஐ கட்சியின் மண்டல செயலாளர் ஹமீத் பிரோஜ் புரட்சிகர மாணவர் இயக்கம் மாநில செயற்குழு உறுப்பினர் மணியரசன் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பேச்சாளர் சர்புதீன் ஷரீப் கண்டன உரையாற்றினர் மேலும் இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் செல்லப்பா ஜியாவுதீன் மற்றும் SDPI கட்சி நிர்வாகிகள் சிதம்பரம் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
Tags: செய்திகள்