லால்பேட்டை துபாய் ஜமாத்தின் 2022 - 2024 ஆண்டுக்கான முதல் செயற்குழு கூட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …
ஏக இறைவன் அருளால் நேற்று லால்பேட்டை துபாய் ஜமாத்தின் 2022 - 2024 ஆண்டுக்கான முதல் செயற்குழு கூட்டம் நேற்று 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணியளவில் டேரா போர்ட் செய்து ஏரியாவிலுள்ள பார்க் ஆஜம் ரெஸ்டாரண்டில் ஜமாத் தலைவர் ஹாஜி M.A ஆசிக் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மௌலவி A.R ரியாஜூல்லாஹ் கிராஅத் ஓதி தொடங்கி வைக்க முதற்கட்டமாக முன்னாள் தலைவர் S.M முஹம்மது ஆசிக், முன்னாள் பொருளாலர் A.J முஹம்மது மைதீன், துணை பொருளாலர் R.P முஹம்மது பத்தாஹ் ஆகியோர் புதிய நிர்வாகிகளிடம் வரவு செலவு கணக்குக்களை ஒப்படைத்தனர். அதனை செயலாளர் Z. பயாஜ் அஹமத் மற்றும் பொருளாலர் A.R ரபியுல் அஹ்மது ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...!!
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..!!
1) லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை துபாய் ஜமாத் உறுப்பினர்கள் மூலம் பெறப்பட்ட ஜகாத் பணம் 1 லட்சத்தி 90 ஆயிரம் ரூபாயிலிருந்து லால்பேட்டை ஹெல்த்கேர் செண்டருக்கு 1 லட்சம் வழங்கி அதன் மூலம் ஏழை எளியவர்களுக்கு இன்சூரன்ஸ் முறையில் இலவச சிகிச்சை வழங்குவது..
2) மீதமுள்ள 90 ஆயிரம் ரூபாய் ஜகாத் நிதியிலிருந்து லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சார்பில் முதற்கட்டமாக வரும் ஜூலை 13 ஆம் தேதியன்று ஏழை சிறுவர்களுக்கு கத்னா (சுன்னத்) செய்வது இரண்டாம் கட்டமாக சில மாத இடைவெளிக்கு பிறகு செய்வது..
3) லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சார்பில் அமீரக தேசிய தினமான (UAE National Day) டிசம்பர் 2 அன்று துபாயில் இரத்ததான முகாம் (Blood Donation Camp) மற்றும் லால்பேட்டை மண்ணின் மைந்தர்கள் சந்திப்பு நிகழ்ச்சி (Get Together) நடத்துவது..
4) லால்பேட்டை பனேசா பள்ளிவாசல் கட்டிட உதவிக்கோரி வந்த கடிதத்திற்கு ஒப்புதல் வழங்கி ரூபாய் 10,000 வழங்க முடிவு செய்யப்பட்டது..
5) லால்பேட்டை ஜன்னத்துல் நையிம் மஹல்லா கொல்லிமலை கீழ்பாதி பகுதியில் ஒரு ஏழைத்தாய்க்கு மருத்துவ உதவிக்கோரி வந்த கடிதத்திற்கு ஒப்புதல் வழங்கி ரூபாய் 10,000 வழங்க முடிவு செய்யப்பட்டது..
5) லால்பேட்டை துபாய் ஜமாத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை விரிவுப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது...
ஏற்ற தீர்மானத்தை நிறைவேற்ற வல்ல இறைவன் அருள்புரிவானாக என பிறாத்தித்தவனாக
அழைப்பை ஏற்று வந்த
நம் ஜமாஅத்தின் நிர்வாகிகள் அனைவர்க்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
மேலும் நமது ஜமாத்தின் சேவைகள் தொடர ஜமாத்தின் உறுப்பினர்கள் தங்களது பங்களிப்பை( சந்தா) கொடுத்து உதவுமாறு கேட்டுகொள்கிறோம்.
இப்படிக்கு
என்றென்றும் மக்கள் சேவையில்..
லால்பேட்டை துபாய் ஜமாத்
Tags: லால்பேட்டை