Breaking News

அரஃபா பேருரை இனி இனிய தமிழில்....

நிர்வாகி
0

 


அரஃபா பேருரை இனி இனிய தமிழில்....

தமிழ் மொழி பேசும் ஹாஜிகளுக்கு இனிப்பான செய்தி...!


ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜின் போது பிறை 9 அன்று அரஃபா பெருவெளியில் உலக மக்களுக்காக உரை நிகழ்த்தப்படுவது முக்கிய நிகழ்வாகும்; 


அரபியில் ஆற்றப்படும் அந்த உரை, இதுவரை ஆங்கிலம், பிரஞ்சு, மலாய், உருது, பாரசீகம், ரஷ்யன், சீனம், பெங்காலி, துருக்கியம், ஹௌசா ஆகிய 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது; 


இந்நிலையில் புனித இல்ல நிர்வாகத் தலைவர் ஷேய்க் அப்துர் ரஹ்மான் சுதைசி அவர்களின் வழிகாட்டலில் இந்த வருடம் முதல் புதிதாக ஸ்பானிஷ், ஹிந்தி, தமிழ், சுவாஹிலி ஆகிய நான்கு மொழிகள் இணைக்கப்பட்டு 14 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது, இன்ஷா அல்லாஹ். 


அதில் நமது " தமிழ் " மொழியும் மொழிபெயர்ப்பு வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது நமக்கு எல்லாம் மகிழ்ச்சி தரும் செய்தி.


இந்த வருட அரஃபா பேருரை வரும் 8/7/2022 வெள்ளிக்கிழமை மதியம் நிகழ்த்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Tags: உலக செய்திகள் சமுதாய செய்திகள்

Share this