Breaking News

கொள்ளுமேட்டில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்...!!

நிர்வாகி
0


ஜூலை 31.,


இன்று கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேடு மஜக கிளை சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா பகல் நேர நிகழ்ச்சியாக  உற்சாகத்துடன்  நடைபெற்றது.


இது மஜக சார்பில் அர்ப்பணிக்கப்பட்ட 15 வது ஆம்புலன்ஸ் சேவை ஆகும்.


ஆம்புலன்ஸ் சாவியை மஜக பொதுச்செயலாளர் அர்பணிக்க கொள்ளுமேடு ஜமாத்தார்கள், மஜக கிளை நிர்வாகிகள் பெற்று கொண்டனர்.


இதில் பேசிய பொதுச் செயலாளர் அவர்கள் வகுப்பு வாதத்தையும், பிரிவினை அரசியலையும் கண்டித்து, ஒற்றுமையை வலியுறுத்தி  பேசினார்.


காவி மதவாதத்திற்கு மாற்றாக, சிறுபான்மையினர் தரப்பில் ஒரு வகுப்பு வாதம் உருவாகி விடக் கூடாது என்றவர், அனைத்து சமூக நல்மக்களையும் திரட்டிதான் காவி மதவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றார்.


நடுநிலையாளர்களை எதிரிகளின் பக்கம் தள்ளிவிடும் பதிவுகளை வலைதளங்களில் சிலர் இடுவதை கண்டித்தவர், உணர்ச்சிகரமாக மக்களை திரட்டாமல் அறிவுப் பூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


இதில் பல்வேறு சமூகத்தவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.


முன்னதாக 50 க்கும் மேற்பட்ட  இரு சக்கர வாகன அணிவகுப்புடன், மஜக கொடியை பொதுச்செயலாளர் அவ்வூர் நுழைவாயிலில் வீராணம் ஏரி அருகே  ஏற்றி வைத்தார்.


இந்நிகழ்வில்  மாவட்ட செயலாளர் OR ஜாகிர் ஹுசைன், கொள்ளுமேடு ஊராட்சி மன்ற தலைவர் ஷபிக்குர்ரஹ்மான், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் மெஹராஜுத்தின் , மாவட்ட துணை செயலாளர் ரியாஸ்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் AMK முகமது அம்ஜா, துபாய்  மண்டல துணை  செயலாளர் தையூப், துபாய் மாநகர பொருளாளர் பயாஜ் அஹமத் கொள்ளுமேடு நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







Tags: செய்திகள்

Share this