Breaking News

ஆரம்பமானது ஹஜ் வணக்கங்கள்: ...!

நிர்வாகி
0

 

இன்று பிறை எட்டு: ஹஜ்ஜுக்காக சென்றவர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து புறப்பட்டு மினாவை நோக்கி செல்வார்கள்; 


செல்லும் அவர்கள் ளுஹ்ர், அசர், மஃரிப், இஷா, ஸுப்ஹ் வரை அங்கே தொழுகை நடத்துவார்கள். அதன்பிறகு அங்கிருந்து ஹஜ்ஜின் முக்கிய கடமையாகிய அரஃபாவுக்கு (9 கி மீ இடைவெளி) தங்கச் செல்வார்கள். 


இந்த ஆரம்ப நாளுக்கு (பிறை 8) யவ்முத் தர்வியா என்று சொல்லப்படும்;


ஆரம்ப காலங்களில் மக்காவிலிருந்து மினா செல்லும் போது (7 கி மீ இடைவெளி) தங்களுக்காகவும் தங்களின் ஒட்டகம் போன்ற வாகனங்களுக்காகவும் ஐந்து நாட்களுக்குத் தேவையான தண்ணீர் ஏற்பாடுகளுடன் செல்வதின் காரணமாக தாகம் தீர்க்கும் நாள் என்ற அர்த்தம் கொண்ட  யவ்முத் தர்வியா என்று பிறை எட்டுக்கு அழைக்கப்படுகிறது.


உலகத்திலேயே மிக அதிகமான கூடாரங்கள் நிறைந்த ஒரு நகரம் மினா என்று  சொல்லப்படுகிறது. ஹஜ்ஜுக்குச் சென்ற அனைத்து மக்களும் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் தங்குவதற்கு தேவையான குளிர் சாதன வசதிகளுடன் கூடார ஏற்பாடுகள் சவுதி அரசால் மிக விரிவாக செய்யப்பட்டிருக்கிறது.


இது 2.5 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில், 2.6 மில்லியன் மக்கள் வசிக்கும் திறன் கொண்டது. அனைத்து கூடாரங்களும் எளிதில் தீப்பிடிக்க முடியாத வகையிலும், தட்பவெப்ப சூழ்நிலைகளை சம நிலையில் வைத்திருக்கும் விதமாக நவீனப்படுத்தப்பட்டு இருக்கிறது.


கூடாரங்கள் நடைபாதை, ஒளியூட்டப்பட்ட மற்றும் அடையாளமிடப்பட்ட தாழ்வாரங்கள் வழியாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன, மேலும் ஒவ்வொரு கூடாரமும் பாதுகாப்புக்காக உலோக வேலிகளால் சூழப்பட்டுள்ளது, முக்கிய வாயில்கள் மற்றும் அவசரகால வெளியேற்றங்கள் உள்ளன.


ஒவ்வொரு கூடாரமும் கூடாரங்கள் 6 முதல் 8 மீட்டர் அல்லது 12 முதல் 8 மீட்டர் வரை இருக்கும், மேலும் தீயணைப்பான்கள் ஒவ்வொரு 100 மீட்டருக்கு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

மேலும் தீயை அணைக்க  மினாவுக்கு அருகில் உள்ள மலைகளின் உச்சியில் உள்ள சுரங்கப்பாதைகளில் 2,00,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட சிறப்பு நீர் தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளன.


வெப்பத்தை உணரும் போது தானாகவே செயல்படும் தண்ணீர் தெளிப்பான்கள், ஒவ்வொரு கூடாரத்திலும் நிறுவப்பட்டு, ஆபத்தான தருணங்களில் எச்சரிக்க அலாரம் ஒலிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. 


ஏனெனில் பிறை எட்டு அன்றும் பிறை 10 பகலில் இருந்து பிறை 12 அல்லது 13 வரை அனைத்து ஹாஜிகளும் இங்கே தான் தங்குவார்கள்; அங்கிருக்கும் மூன்று கல்லெறி தளங்களிலும் தினமும் கல்லெறியும் நிகழ்ச்சி நடைபெறும்; பிறை 12 மாலை வரைக்கும் மினாவில் தங்குவதின் மூலமாக ஹஜ் உடைய வணக்கங்கள் நிறைவு பெறுகிறது.


நன்றி..ஜே.எஸ்.ரிஃபாயீ 










Tags: இஸ்லாம் சமுதாய செய்திகள்

Share this